IND vs ENG 4th Test: 5 நாட்களும் மழைக்கு வாய்ப்பு.. இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் வானிலை ரிப்போர்ட்!

IND vs ENG 4th Test Weather Forecast: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற உள்ளது. மழை காரணமாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்திய அணிக்கு காயம் காரணமாக சில சிக்கல்கள் உள்ளன. இரு அணிகளின் சாத்தியமான ஆடும் XI-கள் மற்றும் வானிலை முன்னறிவிப்பு இந்த கட்டுரையில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

IND vs ENG 4th Test: 5 நாட்களும் மழைக்கு வாய்ப்பு.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியின் வானிலை ரிப்போர்ட்!

இந்திய அணி

Published: 

23 Jul 2025 08:39 AM

இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் (IND vs ENG Test Series) இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இப்போது மான்செஸ்டரில் தொடரின் நான்காவது டெஸ்ட் (IND vs ENG 4th Test)  2025 ஜூலை 23ம் தேதியான இன்று முதல் மதியம் 3.30 மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம், இங்கிலாந்து தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெறும். அதே நேரத்தில் இந்திய அணி (Indian Cricket Team) வெற்றி பெற்றால் 2-2 என தொடரை சமன் செய்யும். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் தொடங்குவதற்கு முன், பிட்ச் ரிப்போர்ட், வானிலை நிலவரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தெரிந்து கொள்வோம்.

பிட்ச் ரிப்போர்ட்:

கடந்த சில நாட்களாக மான்செஸ்டரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழைக்காலத்தில், முதல் நாள் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தலாம். பொதுவாக ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தின் ஆடுகளம் வறண்டதாகவே இருக்கும். அதன்படி சுழற்பந்து வீச்சு மிகவும் ஆபத்தானதாக இருக்கும். ஆனால் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்யும் சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இரு அணிகளும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். காரணம், பிட்ச்சில் புல் காணப்படுகிறது.

ALSO READ: 3வது டெஸ்டில் ஜாக் கிரௌலியுடன் வாக்குவாதம் ஏன்..? சுப்மன் கில் விளக்கம்..!

வானிலை எப்படி இருக்கும்?

2025 ஜூலை 2வது வாரத்தில் மான்செஸ்டரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதேநேரத்தில், இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்டின் 5 நாட்களிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாளில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாகக் குறையக்கூடும். மழை பெய்ய 85 சதவீத வாய்ப்பு இருப்பதால், இரண்டாம் நாள் முழுவதும் மழை வெளுத்து வாங்கலாம். 3வது மற்றும் 4வது நாளில் கனமழை பெய்ய வாய்ப்பில்லை, கடைசி நாளிலும் ஆட்டம் மழையால் பல முறை நிறுத்தப்படலாம்.

யார் எல்லாம் காயமடைந்துள்ளனர்?

இந்தியா – இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்டுக்கு முன்பு இந்திய அணி மிகவும் சிக்கலில் உள்ளது. நிதிஷ் குமார் ரெட்டி காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். ஆகாஷ்தீப் மற்றும் அர்ஷ்தீப் மீண்டும் 100 சதவீதம் விளையாடவில்லை, எனவே மாற்று வீரர் தேவைப்பட்டால், அன்ஷுல் காம்போஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நான்காவது டெஸ்டில் ஆகாஷ்தீப் விளையாட மாட்டார் என்று கேப்டன் சுப்மான் கில் தெளிவுபடுத்தியுள்ளார். நல்ல விஷயம் என்னவென்றால், லார்ட்ஸ் டெஸ்டில் காயமடைந்த ரிஷப் பண்ட் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் விக்கெட் கீப்பராக களமிறங்கலாம். கடந்த போட்டியில் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக மட்டும் களமிறங்கினார்.

ALSO READ: புதிய மாற்றத்துடன் களமிறங்கும் இங்கிலாந்து.. இந்திய அணி தாக்கு பிடிக்குமா..?

இந்தியாவின் சாத்தியமான ஆடும் லெவன்:

கே.எல்.ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கருண் நாயர், சுப்மன் கில், ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா , முகமது சிராஜ், அன்ஷுல் கம்போஜ்

இங்கிலாந்து அணியின் விளையாடும் XI:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், லியாம் டாசன், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.