Pahalgam Terror Attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. ஐபிஎல்லில் 2 முக்கிய விஷயங்களுக்கு தடை விதித்த பிசிசிஐ!

BCCI's Tribute: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பிசிசிஐ, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பட்டாசு வெடித்தல் மற்றும் சியர்லீடர்கள் நடனமாடுவதை தடை செய்துள்ளது. மேலும், வீரர்கள் கருப்புப்பட்டை அணிந்து, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவார்கள். இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

Pahalgam Terror Attack: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்.. ஐபிஎல்லில் 2 முக்கிய விஷயங்களுக்கு தடை விதித்த பிசிசிஐ!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - மும்பை இந்தியன்ஸ்

Published: 

23 Apr 2025 14:51 PM

தெற்கு காஷ்மீரில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் (Pahalgam Terror Attack) இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், இன்று (23.04.2025) நடைபெறவுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிகளுக்கு இடையே இரண்டு விஷயங்களைத் தடை செய்வது உட்பட 4 பெரிய முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளது. ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட்டில் நடைபெறுகிறது.

பிசிசிஐ இரண்டு விஷயங்களைத் தடை:

பஹல்காமில் நடந்த பயங்கராவாத தாக்குதலில் பிறகு பிசிசிஐ இரண்டு விஷயங்களுக்கு இன்றைய ஹைதராபாத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் தடை விதித்துள்ளது. அதில் ஒன்று சியர்லீடர்களின் நடனம். மற்றொன்றி போட்டியின்போதோ அல்லது போட்டி முடிவுக்கு பிறகோ பட்டாசு வெடிப்பது உள்ளிட்ட இரண்டு விஷயங்களுக்கு பிசிசிஐ தடை விதித்துள்ளது. 2025 ஏப்ரல் 23 ம் தேதியான மும்பைக்கும் ஹைதராபாத்துக்கும் இடையிலான போட்டிக்கு மட்டுமே இந்த கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது பஹல்காமில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்களுக்கு பிசிசிஐ மற்றும் ஐபிஎல் அஞ்சலி செலுத்துவதற்கான ஒரு வழியாகும்.

2 பெரிய முடிவுகள்:

சியர்லீடர்கள் மற்றும் பட்டாசுகளுக்கு தடை விதித்தது மட்டுமின்றி, மேலும் பிசிசிஐ 2 பெரிய முடிவுகளை செய்துள்ளது. பிசிசிஐ எடுத்த அந்த இரண்டு நடவடிக்கைகளின்படி, 2025 ஏப்ரல் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இடையேயான போட்டியில் அனைத்து வீரர்களும் நடுவர்களும் கைகளில் கருப்பு பட்டை அணிந்து களத்தில் இறங்குவார்கள். அதைத் தவிர, போட்டிக்கு முன் இரு அணிகளும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த இருக்கிறார்கள்.

பயங்கரவாத தாக்குதல்:

2025 ஏப்ரல் 22ம் தேதியான நேற்று மதியம் 3 மணியளவில் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாத தாக்குதலில் மொத்தம் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்கு முன்பு, பயங்கரவாதிகள் போலி சீருடைகளை அணிந்து சுற்றித் திரிந்ததாகவும், இதனால் எந்த சுற்றுலாப் பயணிகளும் அவர்களை சந்தேகிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, சச்சின் டெண்டுல்கர், சுப்மன் கில், கே.எல்.ராகுல் மற்றும் பும்ரா உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது சமூக ஊடகங்கள் மூலம் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.