Ayrton Senna: அஜித் முத்தமிட்ட ரேஸர் சிலை.. பந்தயத்தில் பறிபோன கடைசி மூச்சு.. யார் இந்த அயர்டன் சென்னா..?

Ajith Kumar Pays Tribute to Ayrton Senna: நடிகர் அஜித் குமார், மூன்று முறை ஃபார்முலா ஒன் உலக சாம்பியன் அயர்டன் சென்னாவின் சிலைக்கு மரியாதை செலுத்தியது இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தச் செய்தியை அடுத்து, அயர்டன் சென்னாவின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள், F1 போட்டிகளில் அவரது பங்களிப்பு ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

Ayrton Senna: அஜித் முத்தமிட்ட ரேஸர் சிலை.. பந்தயத்தில் பறிபோன கடைசி மூச்சு.. யார் இந்த அயர்டன் சென்னா..?

அஜித்குமார் - அயர்டன் சென்னா

Updated On: 

21 May 2025 07:48 AM

3 முறை ஃபார்முலா 1 (Formula 1) உலக சாம்பியான மறைந்த அயர்டன் சென்னாவின் (Ayrton Senna) உருவ சிலையின் பாதத்திற்கு முத்தமிட்டு நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ கடந்த சில மணிநேரங்களாக இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. இந்தநிலையில், நடிகர் அஜித் குமார் முத்தமிட்ட நபர் யார்..? இவர் என்ன சாதனையை படைத்தார்..? உள்ளிட்ட விவரங்களை இணையவாசிகள் கூகுள், சமூக வலைதளங்கள் என அனைத்திலும் தேட தொடங்கிவிட்டனர். இந்தநிலையில், யார் இந்த அயர்டன் சென்னா என்ற விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

யார் இந்த அயர்டன் சென்னா..?

கடந்த 1960ம் ஆண்டு மார்ச் 21ம் தேதி அயர்டன் சென்னா சில்வா, சாவ் பாலோவில் பிறந்தார். இவரது தாய் நீட், தாயார் பெயர் மில்டன். இவர் நிலம் மற்றும் தொழிற்சாலை உரிமையாளராக இருந்தார். அயர்டன் சென்னாவுக்கு விவியன் என்ற அக்காவும், லியோனார்டோ என்ற தம்பியும் இருந்தனர். அயர்டன் சென்னா சில்வா என்ற பெயர் இருந்தாலும், அவரது பெற்றோர்கள் ‘பெக்கோ’ என்ற செல்லப்பெயரை கொண்டு அழைத்தார். சென்னாவுக்கு இளம் வயதிலேயே ஏராளமான விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் இருந்தாலும், மோட்டார் பந்தயத்தில் தனி ஆர்வம் காட்டினார். இதன் காரணமாக, சென்னா தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலைகளில் பைக் ரேஸ்களில் கலந்து கொண்டார்.

தொடர்ந்து, சென்னாவுக்கு மிகப்பெரிய பந்தய போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், 13 வயது ஆகும் வரை அவரால் எந்தவொரு பந்தய போட்டிகளிலும் கலந்துகொள்ள முடியவில்லை. அயர்டன் சென்னாவுக்கு 13 வயது ஆனபிறகு, சாவ் பாலோ F1 சுற்றுக்கு அருகிலுள்ள ஒரு கார்ட் டிராக்கிற்கு சென்று தனது அறிமுக போட்டியிலேயே கலந்து கொண்டு வெற்றிபெற்றி அசத்தினார்.

சென்னா பற்றிய ஆவணப்படம்:

சென்னா தொடர்ந்து ஏராளமான பந்தய போட்டிகளில் கலந்துகொண்டது மட்டுமல்லாமல், ஏராளமான வெற்றிகளை குவித்தார். இது அனைத்து உள்ளூர் பட்டங்கள் என்பதால், அதனை தொடர்ந்து 1977ம் ஆண்டு தென் அமெரிக்கா கார்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை தட்டி சென்றார். இதன்பிறகு, அயர்டன் சென்னா சில்வா ஐரோப்பாவிற்கு குடிபெயர்ந்தார். இங்குதான், இவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது என்றே சொல்லலாம்.

1980 காலக்கட்டத்தில் ஃபார்முலா ஃபோர்டு 1600, பிரிட்டிஷ் மற்றும் ஐரோப்பிய ஃபார்முலா ஃபோர்டு 2000 மற்றும் பிரிட்டிஷ் பார்முலா 3 பட்டங்களை வென்று அசத்தினார். தொடர்ந்து, மதிப்புமிக்க மக்காவ் கிராண்ட் பிரிக்ஸையும் வென்றார்.

அஜித் மரியாதை

F1-க்குள் சென்னா அடியெடுத்து வைத்தது எப்படி..?

ஜூனியர் பிரிவுகளில் சென்னாவின் வெற்றிகள் F1க்குள் அடியெடுத்து வைக்க பெரிதும் உதவி செய்தது. 1985ம் ஆண்டில் போர்த்துகீசிய கிராண்ட் பிரிக்ஸில் தனது F1 வாழ்க்கையில் முதல் போல் நிலையில் வெற்றி பெற்றார். இதன்பிறகு, அயர்டன் சென்னா சில்வா 3 உலக சாம்பியன்ஷிப்கள், 41 வெற்றிகள் மற்றும் 65 போல் (துருவ நிலைகள்) சாம்பியன் பட்டம் வென்றது.

அயர்டன் சென்னா சில்வா ரேஸை எவ்வளவு காதலித்தாரோ, அதே ரேஸூம் இவரை அதிகளவில் காதலித்தது போல.. அதன்படி, சென்னாவின் கடைசி பந்தயம்தான் அவரது வாழ்க்கையின் கடைசி நாளாக அமைந்தது. கடந்த 1994ம் ஆண்டு சான் மரினோ கிராண்ட் பிரிக்ஸின் பந்தயத்தின்போது அவரது ரேஸ் விபத்துக்குள்ளாகி மரணத்துடன் முடிவடைந்தது. இவரது வாழ்நாள் சாதனையை உலகிற்கு தெரியப்படுத்தும் வகையில் நெட்ஃபிக்ஸ் ஆவணப்படமான ‘சென்னா’வை 2024 நவம்பர் 29 அன்று வெளியிட்டது. இந்த ஆவணப்படத்தில் அயர்டன் சென்னாவின் ஆளுமை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியும், அவரது பெரும்பாலான உயர்வு தாழ்வுகள் மற்றும் அவரது தொழில்முறை பயணத்தைப் பற்றியும் பேசுகிறது.