IPL 2025: பிளே ஆஃப்க்குள் 4வது அணியாக நுழைவது யார்..? மும்பை – டெல்லி இன்று பலப்பரீட்சை!
MI vs DC: ஐபிஎல் 2025 இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 5 அணிகள் வெளியேறிய நிலையில், 3 அணிகள் பிளே ஆஃப்க்குள் சென்றுள்ளன. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையேயான கடைசி பிளே ஆஃப் இடம் போட்டி மே 21 அன்று வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான பிளேயிங் லெவன், ஹெட்-டு-ஹெட், வான்கடே பிட்ச் ரிப்போர்ட் மற்றும் வானிலை முன்னறிவிப்பு ஆகியவை இங்கே விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

ரோஹித் சர்மா - டெல்லி கேபிடல்ஸ்
ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் இப்போது கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஐபிஎல் 2025 சீசனில் இருந்து இதுவரை 5 அணிகள் வெளியேற்றப்பட்ட நிலையில், 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறியுள்ளன. இப்போது, பிளே ஆஃப்களில் ஒரே ஒரு இடம் மட்டுமே மீதமுள்ளது. இதற்காக மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஐபிஎல் 2025 சீசனின் 63வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 21ம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மும்பையில் வான்கடே ஸ்டேடியத்தில் மோதவுள்ளன. பிளே ஆஃப்களுக்கு முக்கியமான இந்த போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் லெவன், ஹெட் டூ ஹெட், வான்கடே ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
வான்கடே பிட்ச் ரிப்போர்ட்:
மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தின் பிட்சானது எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு உதவியாக இருக்கும். இங்குள்ள ஆடுகளம் சிவப்பு மண்ணால் ஆனது என்பதால் சீராக பவுன்ஸ் இருக்கும். இதனால், பந்து பேட்டில் நன்றாக பட்டு, ரன் குவிக்க உதவி செய்யும். அதேபோல், இங்கு பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்களையும் எளிதாக விளையாடுவாரக்ள். இந்தக் காரணத்தினால்தான், இங்குள்ள பெரும்பாலான போட்டிகள் அதிக ஸ்கோரிங் கொண்டவை. அதே நேரத்தில், வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியின் தொடக்கத்தில் சிறிது ஸ்விங்கை பெறலாம்.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் 36 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிகபட்சமாக 20 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், இரு அணிகளும் வான்கடே ஸ்டேடியத்தில் 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், மும்பை இந்தியன்ஸ் அணி 7 போட்டிகளிலும், டெல்லி கேபிடல்ஸ் 3 போட்டிகளிலும் வென்றுள்ளது.
வானிலை எப்படி..?
டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளிக்கு இடையிலான போட்டியில் மழை பெய்ய 10% மட்டுமே வாய்ப்புள்ளது. இருப்பினும், போட்டி பாதிக்கப்படும் அளவிற்கு தாக்கம் இருக்காது. போட்டியின் கடைசி ஒரு மணி நேரத்தில் சிறிது மழை (40%) எதிர்பார்க்கப்படுகிறது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
மும்பை இந்தியன்ஸ்:
ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, டபிள்யூ.ஜி. ஜாக்ஸ், நமன் தீர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், ஜஸ்பிரிட் பும்ரா, டிரெண்ட் போல்ட், தீபக் சாஹர்
டெல்லி கேபிடல்ஸ்:
அபிஷேக் போரல் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், டி ஸ்டப்ஸ், எஃப் டு பிளெசிஸ், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, ஏஆர் ஷர்மா, அக்சர் படேல் (கேப்டன்), கேஎல் யாதவ், டி சமீரா, முஸ்தபிசுர் ரஹ்மான்