சமையலுக்கு நோ.. கையில் ஸ்மார்ட்வாட்ச்.. ஹஜ் யாத்ரீகர்களுக்கான புதிய விதிகள்! | TV9 Tamil News

சமையலுக்கு நோ.. கையில் ஸ்மார்ட்வாட்ச்.. ஹஜ் யாத்ரீகர்களுக்கான புதிய விதிகள்!

Updated On: 

27 Jan 2026 12:25 PM

 IST

Hajj 2026 New Rules : ஹஜ் யாத்ரீகர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. யாத்ரீகர்கள் இனி மெக்கா மற்றும் மதீனாவில் சமைக்க முடியாது. இருப்பினும், இந்த முறை, யாத்ரீகர்கள் சில புதிய வசதிகளைப் பெறுவார்கள். பாதுகாப்பு விஷயங்களை கருத்தில் கொண்டு புது விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன

1 / 5ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மெக்கா மற்றும் மதீனாவில் யாத்ரீகர்கள் இனி சமைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.யாத்ரீகர்கள் தங்கள் சொந்த உணவை சமைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  சமைக்கும் போது தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரை செல்லும் யாத்ரீகர்களுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மெக்கா மற்றும் மதீனாவில் யாத்ரீகர்கள் இனி சமைக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.யாத்ரீகர்கள் தங்கள் சொந்த உணவை சமைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமைக்கும் போது தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 / 5

யாத்ரீகர்கள் மெக்கா மற்றும் மதீனாவிற்கு நடந்து செல்ல வேண்டும் என்று விளக்கினார். இனிமேல் யாத்ரீகர்கள் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக மெக்கா மற்றும் மதீனாவில் சுயமாக சமைப்பது தடைசெய்யப்பட்டுள்ளது

3 / 5

இந்த ஆண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு மினாவில் தரையில் மெத்தைகளுக்கு பதிலாக சோபா-கம்-பெட்கள் வழங்கப்படும். பேருந்து சேவைகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. வைஃபை இலவசமாகக் கிடைக்கும்.

4 / 5

டிஜிட்டல் பிரேஸ்லெட் ஹஜ் சுவிதா ஆப் 2.0 உடன் இணைக்கப்பட்ட ஸ்மார்ட்வாட்ச் வடிவத்தில் இருக்கும். இந்த தொழில்நுட்பம் மூத்த யாத்ரீகர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

5 / 5

Hajj Pilgrimaஇந்த கடிகாரம் யாத்ரீகர்களின் இருப்பிடத்தைத் தொடர்ந்து காண்பிக்கும், மேலும் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படும். இந்த முறை மினாவில் கட்டப்படும் முகாம்கள் மரத்தால் ஆனவை ஆனால் முற்றிலும் தீப்பிடிக்காதவைs