விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் – கலந்துகொள்ளும் ஸ்டார்ஸ் யார்? | TV9 Tamil News

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா திருமணம் – கலந்துகொள்ளும் ஸ்டார்ஸ் யார்?

Published: 

17 Feb 2026 22:17 PM

 IST

டோலிவுட்டின் மிக பிரபல காதல் ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருணம் வருகிற பிப்ரவரி 26, 2026 அன்று மிக பிரம்மாண்டமாக நடைபெறவருக்கிறது. இந்த திருமணத்தில் கநல்துகொள்ளும் நட்சத்திரங்கள் யார் யார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5டோலிவுட் திரையுலகில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் பற்றிய செய்தி இப்போது தேசிய அளவில் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது.  வெள்ளித்திரையில் தங்கள் கெமிஸ்ட்ரியுடன் மேஜிக்கை உருவாக்கிய இந்த ஜோடி இப்போது நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணையவுள்ளது.

டோலிவுட் திரையுலகில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமணம் பற்றிய செய்தி இப்போது தேசிய அளவில் பரபரப்பான விஷயமாக மாறியுள்ளது. வெள்ளித்திரையில் தங்கள் கெமிஸ்ட்ரியுடன் மேஜிக்கை உருவாக்கிய இந்த ஜோடி இப்போது நிஜ வாழ்க்கையிலும் ஒன்றாக இணையவுள்ளது.

2 / 5

அவர்களின் நிச்சயதார்த்தம் ஏற்கனவே குடும்பத்தார் முன்னிலையில் படு ரகசியமாக நடைபெற்ற நிலையில், விஜய் தேவரகொணடா மற்றும் ராஷ்மிகாவின் திருமணம் பிப்ரவரி 26, 2026 அன்று ராஜஸ்தானின் உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.

3 / 5

இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. உதய்பூரில் உள்ள ஒரு ஆடம்பரமான அரண்மனையில் இந்த டெஸ்டினேஷன் திருமணத்திற்கான பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், ராஷ்மிகா- விஜய் தேவரகொண்டா திருமண விழா குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மட்டுமே நடைபெறும் என்பது அறியப்படுகிறது.

4 / 5

இருப்பினும், மார்ச் 4, 2026 அன்று திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்களுக்காக ஒரு பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

5 / 5

தென்னிந்திய திரைப்பட பிரபலங்கள் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த பல பிரபலங்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. பிரபல இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா, மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நந்தமுரி பாலகிருஷ்ணா, விக்கி கௌஷல் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பிரபல இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நண்பர்கள் பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது.