பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்.. வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்.. | TV9 Tamil News

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்.. வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்..

Published: 

14 Jan 2026 16:14 PM

 IST

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் வருமான வரி செலுத்தும் நபர்கள், தொழில் செய்யும் நபர்கள், நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் அரசின் அறிவிப்புகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

1 / 6மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை  தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் வருமான வரி செலுத்தும் நபர்கள், தொழில் செய்யும் நபர்கள், நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் அரசின் அறிவிப்புகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28, 2026 முதல் தொடங்க உள்ளது. இந்த நிலையில், பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் வருமான வரி செலுத்தும் நபர்கள், தொழில் செய்யும் நபர்கள், நடுத்தர வர்க்கத்தினர் அனைவரும் அரசின் அறிவிப்புகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

2 / 6

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் கட்டம் பிப்ரவரி 13, 2026 அன்றுடன் நிறைவடையும் நிலையில், இரண்டாவது கட்டம் மார்ச் 9, 2026 அன்று தொடங்கி ஏப்ரல் 2, 2026 அன்று வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் மத்திய பட்ஜெட் குறித்த விரிவான விவாதங்கள், மானிய கோரிக்கைகள் மற்றும் முக்கிய பொருளாதார கொள்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கலந்துரையாடப்படவுள்ளன.

3 / 6

இந்த பட்ஜெட்டில் வரிவிதிப்பு, வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இந்த பட்ஜெட் முக்கிய தீர்மானங்களை கொண்டிருக்கும் என்பதால், பொதுமக்கள் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

4 / 6

இந்த பட்ஜெட்டில் அரசாங்கம் புதிய வருமான வரி மசோதாவை அறிமுகப்படுத்தக்கூடும். 64 ஆண்டு பழமையான வருமான வரிச் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பிரதான் மந்திரி கிசான் யோஜனாவின் கீழ் வழங்கப்படும் தொகையை இரட்டிப்பாக்குவதும் சாத்தியமாகும்.

5 / 6

உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருந்துத் துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளும் இருப்பதாகத் தெரிகிறது. இதற்கிடையில், நாட்டின் உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவை ரூ. 11 லட்சம் கோடியிலிருந்து ரூ. 15 லட்சம் கோடியாக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகிறது.

6 / 6

கடந்த பட்ஜெட் ரூ. 50.65 லட்சம் கோடியாக இருந்தது. இந்த முறை அது ரூ. 60 லட்சம் கோடியைத் தாண்டக்கூடும் என்று தெரிகிறது.