இரண்டு முக்கிய மாற்றங்களை கொண்டுவந்த EPFO.. இனி ஊழியர்களுக்கு இவற்றில் சிக்கல் இல்லை! | TV9 Tamil News

இரண்டு முக்கிய மாற்றங்களை கொண்டுவந்த EPFO.. இனி ஊழியர்களுக்கு இவற்றில் சிக்கல் இல்லை!

Updated On: 

19 Dec 2025 23:50 PM

 IST

Two Important Changes Introduced In EPFO | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் ஏராளமான ஊழியர்கள் பயன்பெற்று வரும் நிலையில், இரண்டு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5இந்தியாவில் பணியாற்றும் லட்சக்கணக்கான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சத்தில் (EPFO - Employee Provident Fund Organization) பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கு மேலும் சிறந்த பலன்களை வழங்கும் வகையில் இபிஎஃப்ஓ பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இரண்டு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்தியாவில் பணியாற்றும் லட்சக்கணக்கான அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சத்தில் (EPFO - Employee Provident Fund Organization) பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில், பயனர்களுக்கு மேலும் சிறந்த பலன்களை வழங்கும் வகையில் இபிஎஃப்ஓ பல முக்கிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது இரண்டு முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது.

2 / 5

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் வார விடுமுறை, அரசு விடுமுறை, பணி மாற்றம் ஆகிவயற்றின் காரணமாக ஏற்படும் இடைவெளிகள் இனி தொடர் பணியாக கருதப்படும் என்று ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

3 / 5

இதேபோல இன்சூரன்ஸ் உடன் தொடர்புடைய ஊழியர்களின் இருப்பு தொகை (EDLI - Employees Deposit Linked Insurance) குறித்த முக்கிய அறிவிப்பையும் இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ளது. அதாவது, இடிஎல்ஐ திட்டத்திற்கான தொகையை ரூ.50,000 ஆக அதிகரித்துள்ளது. பணியில் இருக்கும் இடைவெளி காரணமாக இறப்பு க்ளெய்ம் நிராகரிக்கப்படுவது, அல்லது குறைவான தொகை வழங்கப்படுவது ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

4 / 5

பலருக்கு சனி மற்றும் ஞாயிறு ஆகிய விடுமுறைகளை பணியில் ஏற்படும் இடைவெளியாக கருதில் இடிஎல்ஐ க்ளெய்ம் பலருக்கும் மறுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிக்கல்களை தவிர்க்கவும், ஊழியர்கள் சேவைகளை முழுமையாக பெறுவதையும் உறுதி செய்யும் விதமாகவும் இடிஎல்ஐ க்ளெய்ம் குறித்த இந்த புதிய நெறிமுறைகளை இபிஎஃப்ஓ அறிமுகம் செய்துள்ளது. 

5 / 5

Epfo Pension (2)