சனிப்பெயர்ச்சி 2026.. விருச்சிக ராசியினருக்கு அடிக்குது ஜாக்பாட்.. சொத்துகளை அள்ளிக்கொடுக்கும் பஞ்சம சனி.. | TV9 Tamil News

சனிப்பெயர்ச்சி 2026.. விருச்சிக ராசியினருக்கு அடிக்குது ஜாக்பாட்.. சொத்துகளை அள்ளிக்கொடுக்கும் பஞ்சம சனி..

Updated On: 

03 Mar 2026 16:41 PM

 IST

Sani Peyarchi 2026: விருச்சிக ராசியினருக்கு 2026 முதல் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கடந்த சில ஆண்டுகளாகப் பல போராட்டங்களைச் சந்தித்து வந்த விருச்சிக ராசியினருக்கு பெரும் திருப்புமுனையாக அமையப்போகிறது.சனீஸ்வர பகவான் உங்கள் நேர்மைக்கு ஏற்ற பலன்களை வாரி வழங்கப் போகிறார்.

1 / 52026 மார்ச் 6-ம் தேதி சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல ஏமாற்றங்கள், நஷ்டங்கள் மற்றும் குடும்பப் பிரிவுகளைச் சந்தித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி ஒரு 'ஜாக்பாட்' ஆக அமையப்போகிறது. வறுமை நீங்கி, வசதி வாய்ப்புகள் பெருகும் காலம் இது. கடந்த 5 ஆண்டுகளாக விருச்சிக ராசியினர் படாத கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளனர். தொழில் நஷ்டம், பண விரயம், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழல், மற்றும் பல ஏமாற்றங்களைச் சந்தித்திருப்பீர்கள். இந்த சனிப் பெயர்ச்சியுடன் உங்களின் அந்தப் போராட்டக் காலம் முடிவுக்கு வருகிறது.

2026 மார்ச் 6-ம் தேதி சனீஸ்வர பகவான் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பல ஏமாற்றங்கள், நஷ்டங்கள் மற்றும் குடும்பப் பிரிவுகளைச் சந்தித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி ஒரு 'ஜாக்பாட்' ஆக அமையப்போகிறது. வறுமை நீங்கி, வசதி வாய்ப்புகள் பெருகும் காலம் இது. கடந்த 5 ஆண்டுகளாக விருச்சிக ராசியினர் படாத கஷ்டங்களை அனுபவித்து வந்துள்ளனர். தொழில் நஷ்டம், பண விரயம், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத சூழல், மற்றும் பல ஏமாற்றங்களைச் சந்தித்திருப்பீர்கள். இந்த சனிப் பெயர்ச்சியுடன் உங்களின் அந்தப் போராட்டக் காலம் முடிவுக்கு வருகிறது.

2 / 5

சுப காரியங்கள் மற்றும் சொத்து சேர்க்கை: இனிமேல் தான் உங்களுக்குப் பொருளாதாரம் ரீதியாகப் பொற்காலம் தொடங்குகிறது. மண்ணின் மீது ஆசை வரும், அதாவது நிலம் வாங்குவீர்கள். சொந்த வீடு கட்டும் ஆசை நிறைவேறும். கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்கள் இல்லத்தில் நடக்கும். வண்டி, வாகனங்கள் வாங்குவதற்கான யோகம் உண்டு. நகை மற்றும் சொத்துக்களைச் சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

3 / 5

வேலை மற்றும் பதவி உயர்வு: வேலையில் இருப்பவர்களுக்கு உயர் பதவிகள் தேடி வரும். குறிப்பாகக் காவல்துறை, ஊடகம், ஆன்மீகம் மற்றும் மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு இது மிகச்சிறந்த முன்னேற்றத்தைக் கொடுக்கும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும் மற்றும் அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் அமையும்.

4 / 5

குடும்ப வாழ்க்கையும், எச்சரிக்கையும்: கடந்த காலங்களில் கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, மீண்டும் ஒன்று சேர்ந்து வாழும் சூழல் உருவாகும். பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும். விருச்சிக ராசிக்காரர்களுக்குக் கோபம் அதிகமாக இருக்கும். இந்தக் கோபத்தைக் குறைத்துக் கொண்டால் மட்டுமே வந்த வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆத்திரத்தைக் குறைத்து அன்பாகப் பழகினால் வாழ்வில் பெரும் வெற்றிகளை அடையலாம்.

5 / 5

பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள்: சென்னைக்கு அருகில் உள்ள வள்ளக்கோட்டை முருகனைச் சஷ்டி, கிருத்திகை அல்லது சனிக்கிழமைகளில் வழிபடுவது சிறந்தது. ஒரு சேவல் வாங்கி கோவிலில் விடுவது அல்லது ஏழைகளுக்குத் தானம் செய்வது கஷ்டங்களை நீக்கும். சென்னையில் இருப்பவர்கள் பொழிச்சலூரில் உள்ள சனீஸ்வர பகவானைத் தரிசிப்பதும் மேன்மை தரும்.

Follow Us