Sara Arjun: துரந்தர் படத்தை நிராகரித்த நடிகை.. சாரா அர்ஜுன் ரோலில் இந்த நடிகைதான் நடிக்கவிருந்தாரா? | TV9 Tamil News

Sara Arjun: துரந்தர் படத்தை நிராகரித்த நடிகை.. சாரா அர்ஜுன் ரோலில் இந்த நடிகைதான் நடிக்கவிருந்தாரா?

Updated On: 

20 Mar 2026 16:34 PM

 IST

Dhurandhar Movie : பான் இந்திய திரைப்படமாக கடந்த 2025ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி தற்போதுவரை வரவேற்பை பெற்றுவரும் படம் துரந்தர். இப்படத்தில் சாரா அர்ஜுன் நடித்த வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் என்று தெரியுமா. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

1 / 5தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களிடையே பிரபலமான ஒருவராக இருந்து வந்தவர் சாரா அர்ஜுன். இவர் பாலிவுட் சினிமாவில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து துரந்தர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படமானது கடந்த 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகியிருந்தது.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மக்களிடையே பிரபலமான ஒருவராக இருந்து வந்தவர் சாரா அர்ஜுன். இவர் பாலிவுட் சினிமாவில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்து துரந்தர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். இப்படமானது கடந்த 2025 டிசம்பர் 5ம் தேதியில் வெளியாகியிருந்தது.

2 / 5

நடிகை சாரா அர்ஜுன் தமிழில், தெய்வ திருமகள், சைவம், சில்லுக் கருப்பட்டி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். பின் மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் இளம் பருவ நந்தினி வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்திருந்தார். அந்த விதத்தில் தற்போது பாலிவுட் சினிமா மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

3 / 5

துரந்தர் திரைப்படத்தை இயக்குநர் ஆதித்ய தார் இயக்க, ரன்வீர் சிங், மாதவன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இதில் தன்னை விட 20 வயது மூத்த நடிகரான ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்திருந்தார். இவரின் கதாபாத்திரம் இப்படத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

4 / 5

இப்படமானது 2025ம் ஆண்டு இறுதியில் வெளியாகியிருந்த நிலையில், உலகளாவிய வசூலில் சுமார் ரூ 1300 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழிலும் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சாரா அர்ஜுன் நடித்திருந்த யாலினா ஜமாலி வேடத்தில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா?

5 / 5

ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படத்தில் முதல் முதலில் யாலினா ஜமாலி வேடத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான் நடிக்கவிருந்தார் என கூறப்படுகிறது. அவர் தொடர்ந்து புது படங்களில் பிசியாக இருந்த நிலையில், இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை அவர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இல்லை.

Follow Us