ஆரத் தழுவி வரவேற்றது முதல் பரிசளித்தது வரை.. ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடியின் ராஜ உபசரிப்பு.. தீயாய் பரவும் புகைப்படங்கள்! | TV9 Tamil News

ஆரத் தழுவி வரவேற்றது முதல் பரிசளித்தது வரை.. ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடியின் ராஜ உபசரிப்பு.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!

Updated On: 

07 Dec 2025 13:47 PM

 IST

PM Modi welcomes Russian President: இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், புதினுக்கு பகவத் கீதை பரிசளித்ததை புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார். மேலும், கீதையின் போதனைகள் உலகம் முழுவதும் உள்ள லட்ச கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 / 5ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 23வது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு பயணமாக தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அந்தவகையில், நேற்று (டிசம்பர் 4) மாலை டெல்லி வந்தடைந்த புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையம் சென்று ஆரத் தழுவி வரவேற்றார். விமான நிலையத்தில் இந்தியாவின் பாரம்பரிய நடனங்களுடன் புதினுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், 23வது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க இரண்டு நாள் அரசு பயணமாக தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அந்தவகையில், நேற்று (டிசம்பர் 4) மாலை டெல்லி வந்தடைந்த புதினை, பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையம் சென்று ஆரத் தழுவி வரவேற்றார். விமான நிலையத்தில் இந்தியாவின் பாரம்பரிய நடனங்களுடன் புதினுக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

2 / 5

தொடர்ந்து, தலைவர்கள் இருவரும் ஒரே காரில் பாலம் விமான நிலையத்திலிருந்து லோக் கல்யாண் மார்கில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு புறப்பட்டனர். இதில், சுவாரஸ்யம் என்னவெனில், ரஷ்யாவில் இருந்து விமானம் மூலம் வரவழைக்கப்பட்ட தனது ஆரஸ் செனட் சொகுசு காரில் பயணிக்காத புதின், மோடியின் டொயோட்டா பார்ச்சூனர் காரில் பயணித்தார்.

3 / 5

இதனிடையே, பிரதமர் மோடி நேற்று புதினுடன் பயணித்த டொயோட்டா பார்ச்சூனர் கார் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வழக்கமாக கருப்பு நிற பார்ச்சூனர் காரில் செல்லும் பிரதமர் மோடி, நேற்றைய தினம் புதினை வரவேற்க வெள்ளை நிற பார்ச்சூனர் காரில் சென்றிருந்தார். இந்த காரின் வேகம் உள்பட அனைத்து வசதிகளும் விவிஐபி தரத்திற்காக இந்த காரில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த காரின் பதிவெண் MH01EN5795 ஆகும். எனினும், சொகுசு கார்களில் செல்லாமல் பார்சூனர் காரில் இரு நாட்டு தலைவர்களும் பயணித்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 / 5

பின்னர், பிரதமர் இல்லம் சென்ற புதினுக்கு சிவப்பு கம்பல வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, புதினுக்கு பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் இரவு விருந்து அளித்தார். அங்கு பல்வேறு வகைகளில் சமைக்கப்பட்ட உணவுகளை அளித்து உபசரித்த பிரதமர் மோடி, அவருக்கு பகவத் கீதையின் ரஷ்ய மொழி பதிப்பு நூலை பரிசளித்தார்.

5 / 5

தொடர்ந்து, புதினுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை முப்படைகளின் அணிவகுப்புடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார் புதின். டெல்லியில் நடைபெறும் இந்தியா- ரஷ்யா இடையேயான 23-வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் புதின் பங்கேற்கின்றனர். அப்போது இருநாடுகளிடையேயான வர்த்தக உறவு உள்ளிட்டவை தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.