Pooja Hegde: அந்த மாதிரியான ரசிகர்கள் கூட்டம் நான் வேறு எந்த நடிகருக்கும் பார்த்ததில்லை – பூஜா ஹெக்டே! | TV9 Tamil News

Pooja Hegde: அந்த மாதிரியான ரசிகர்கள் கூட்டம் நான் வேறு எந்த நடிகருக்கும் பார்த்ததில்லை – பூஜா ஹெக்டே!

Updated On: 

13 Feb 2026 17:48 PM

 IST

Pooja Hegde About Fanbase : தென்னிந்திய சினிமாவில் பிரபல கதாநாயகியாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் பூஜா ஹெக்டே. இவர் நேர்காணல் ஒன்றில் அந்த பிரபல நடிகருக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் போல வேறு எந்த நடிகருக்கும் நான் இதுவரை பார்த்ததில்லை. அவர் சொன்ன அந்த பிரபலம் யார் என பார்க்கலாம்.

1 / 5தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருபவர் பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2010ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா என்ற அழகி போட்டியில் பங்குபெற்றிருந்தார். இருந்தாலும் இந்த போட்டியில் அவர் வெற்றிபெறவில்லை. இதை தொடர்ந்துதான் சினிமா பக்கம் திரும்பினார். இது அவரின் வாழ்க்கையையே மாற்றியது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருபவர் பூஜா ஹெக்டே. இவர் கடந்த 2010ம் ஆண்டில் மிஸ் யுனிவர்ஸ் இந்தியா என்ற அழகி போட்டியில் பங்குபெற்றிருந்தார். இருந்தாலும் இந்த போட்டியில் அவர் வெற்றிபெறவில்லை. இதை தொடர்ந்துதான் சினிமா பக்கம் திரும்பினார். இது அவரின் வாழ்க்கையையே மாற்றியது.

2 / 5

அந்த விதத்தில் சினிமாவில் இவருக்கு முதல் திரைப்படமாக அமைந்தது முகமூடி. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் தமிழில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலமாக தான் கதாநாயகியாக அறிமுகமானார். இவருக்கு இப்படமானது எதிர்பாராத அளவிற்கு வரவேற்பை கொடுக்கவில்லை. மேலும் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவிலும் நுழைந்தார்.

3 / 5

இவர் தெலுங்கு சினிமாவில் நுழைந்த இவர் அல்லு அர்ஜுன் முதல் மகேஷ் பாபு போன்ற நடிகர்களுடனும் இணைந்து நடித்திருக்கிறார். இதையடுத்து பல ஆண்டுகளுக்கு பின் விஜயின் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் ரீ எண்டரி கொடுத்தார். இந்த படமானது அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்தது. இதில் ஹலமதி ஹபிபோ பாடலில் நடனமாடி ரசிகர்களை ஈர்த்தார்.

4 / 5

மேலும் இவர் தளபதி விஜய்யின் கடைசி திரைப்படமான ஜன நாயகன் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் கயல் என்ற வேடத்தில் பூஜா ஹெக்டே நடித்திருக்கும் நிலையில், சென்சார் பிரச்சனையின் காரணமாக படம் இன்னும் வெளியாகவில்லை. இதை தொடர்ந்து நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த பூஜா ஹெக்டே, பிரபல நடிகருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.

5 / 5

அந்த நேர்காணலில் பேசிய பூஜா ஹெக்டே, விஜய் சாருக்கு எவ்வளவு ரசிகர்கள் கூட்டம். அதுபோன்று வேறு எந்த நடிகர்களுக்கு இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதா?, என நான் பார்த்ததில்லை. விஜய் சார் ரசிகர்களின் நாயகன் என அதில் அவர் தெரிவித்திருந்தார். இது தொடர்பான தகவல் ரசிகர்கள் மத்தியில் பரவிவருகிறது.