சக்தி வாய்ந்த பங்குனி அமாவாசை.. அபூர்வமான நாளை கட்டாயம் தவறவிடாதீர்.. | TV9 Tamil News

சக்தி வாய்ந்த பங்குனி அமாவாசை.. அபூர்வமான நாளை கட்டாயம் தவறவிடாதீர்..

Published: 

17 Mar 2026 14:24 PM

 IST

Panguni Amavasya 2026; மாலை 06:00 மணிக்கு மேல் சிவாலயம் சென்று 9 நெய் அல்லது நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது பித்ரு தோஷங்களை நீக்கும். பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகச்சிறந்த பலனைத் தரும். மேலும் குடை, நீர்மோர், பானகம் தானம் செய்வது நவகிரக தோஷங்களைக் குறைக்கும்.

1 / 52026-ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் விசேஷமானது. குறிப்பாக இது புதன்கிழமை வருவதால் 'செல்வ வளம் தரும் அமாவாசை' என்று அழைக்கப்படுகிறது. அமாவாசை திதி மற்றும் நேரம் நாள்: 18-03-2026, புதன்கிழமை. திதி ஆரம்பம்: காலை 08.29 மணி.
திதி முடிவு: மறுநாள் (வியாழக்கிழமை) காலை 07.29 மணி ஆகும்.

2026-ஆம் ஆண்டு பங்குனி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மிகவும் விசேஷமானது. குறிப்பாக இது புதன்கிழமை வருவதால் 'செல்வ வளம் தரும் அமாவாசை' என்று அழைக்கப்படுகிறது. அமாவாசை திதி மற்றும் நேரம் நாள்: 18-03-2026, புதன்கிழமை. திதி ஆரம்பம்: காலை 08.29 மணி. திதி முடிவு: மறுநாள் (வியாழக்கிழமை) காலை 07.29 மணி ஆகும்.

2 / 5

முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்: அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது மிக முக்கியம். அன்று காலை 06.19 மணி வரை 'மரண யோகம்' இருப்பதால், அதைத் தவிர்த்துவிட்டு காலை 06.20 மணி முதல் 07.30 மணிக்குள் தர்ப்பணம் கொடுக்கலாம். ஒருவேளை அந்த நேரத்தில் இயலாதவர்கள் காலை 09.00 மணி முதல் 11.30 மணிக்குள் கொடுக்கலாம். எமகண்ட நேரத்தைத் தவிர்ப்பது நல்லது. தர்ப்பணம் கொடுப்பவர்கள் அதுவரை உணவு உட்கொள்ளாமல் விரதம் இருப்பது அவசியமாகும்.

3 / 5

முன்னோர்களுக்கு இலை போடும் நேரம்: அமாவாசை அன்று உச்சி காலத்தில்தான் (மதியம்) முன்னோர்களுக்குப் படையல் இட வேண்டும். மதியம் 01.30 மணி முதல் 02.30 மணிக்குள் படையல் இடுவது சிறந்தது. அன்று மதியம் 12.00 முதல் 01.30 வரை ராகு காலம் இருப்பதால், அதைத் தவிர்த்துவிட்டு 01.30 மணிக்கு மேல் படையல் இடலாம். படையலில் முன்னோர்களுக்குப் பிடித்த உணவுகள், வடை, பாயாசம் ஆகியவற்றை வைத்து வழிபட வேண்டும். முதலில் காகத்திற்குச் சோறு வைத்த பின்னரே நாம் சாப்பிட வேண்டும்.

4 / 5

சிறப்பு வழிபாடுகள் மற்றும் தானங்கள்: சிவன் வழிபாடு: மாலை 06:00 மணிக்கு மேல் சிவாலயம் சென்று 9 நெய் அல்லது நல்லெண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபடுவது பித்ரு தோஷங்களை நீக்கும். பசியோடு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகச்சிறந்த பலனைத் தரும். மேலும், குடை, நீர்மோர் மற்றும் பானகம் தானம் செய்வது நவகிரக தோஷங்களைக் குறைக்கும்.

5 / 5

தாய், தந்தை இல்லாதவர்கள் மட்டும் பசுவிற்கு அகத்தி கீரை கொடுக்கலாம். மற்றவர்கள் பழங்கள் அல்லது காய்கறிகளை வழங்கலாம். புதன்கிழமை வரும் இந்த அமாவாசையில், 11 நாணயங்களை ஒரு மஞ்சள் அல்லது பச்சை துணியில் முடிந்து, உங்கள் பணப்பெட்டி அல்லது லாக்கரில் வைப்பது பொருளாதார வளர்ச்சியைத் தரும் என்பது ஐதீகம்.

Follow Us
Related Stories
Agri S. S. Krishnamurthy Tamil Nadu Election: அதிமுகவில் “வேளாண்” புனைப்பெயருக்கு சொந்தக்காரர்… எம்எல்ஏ பதவியை தக்கவைத்துக் கொள்வாரா அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி!
Thiruvottiyur Constituency Election 2026: தொழிற்சாலைகளால் நிறைந்த திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி.. களம் யாருக்கு சாதகம்?
Vijay Sethupathi: சினிமாவில் ஏ.ஐ சிறந்த ஐடியாவை கொடுக்கிறது.. ஆனால் – விஜய் சேதுபதி பகிர்ந்து சுவாரஸ்ய விஷயம்!
சமூக வலைதளங்களில் இருந்து வெளியேறு… அபிஷேக் சர்மாவுக்கு சூர்யகுமார் யாதவ் – கம்பீர் கொடுத்த அட்வைஸ்
பங்குனி தேய்பிறை பிரதோஷம் 2026.. வழிபாட்டு முறைகளும், சிறப்புகளும்..
Mamitha Baiju: என்னோட ஒரிஜினல் பெயர் அதுதான்.. மமிதா பைஜூ சொன்ன உண்மை!