விஜய்க்கு பிறகு இவர் தான்… மீனாட்சி சௌத்ரியின் புதிய தமிழ் படம் குறித்து வெளியான தகவல் | TV9 Tamil News

விஜய்க்கு பிறகு இவர் தான்… மீனாட்சி சௌத்ரியின் புதிய தமிழ் படம் குறித்து வெளியான தகவல்

Published: 

25 Dec 2025 15:14 PM

 IST

Meenakshi Chaudhary : தளபதி விஜய்யின் தி கோட் திரைப்படத்துக்கு பிறகு நடிகை மீனாட்சி சௌத்ரியின் அடுத்த தமிழ் படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடிக்கவிருக்கிறார்.

1 / 6தென்னிந்திய சினி்மாவில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே பிரபலமானவர் மீனாட்சி சௌத்ரி. இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.

தென்னிந்திய சினி்மாவில் குறுகிய காலத்திலேயே ரசிகர்களிடையே பிரபலமானவர் மீனாட்சி சௌத்ரி. இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.

2 / 6

இந்த நிலையில் தெலுங்கில் இவர் நடித்த ஹிட் - தி செண்ட் கேஸ் திரைப்படம் வெற்றிபெற்றது. இதனையடுத்து இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

3 / 6

மகேஷ் பாபுவுடன் குண்டூர் காரம், துல்கர் சல்மானுடன் லக்கி பாஸ்கர், வெங்கேடஷுடன் சங்கராந்திக்கி வஸ்துனாம் என இவர் நடித்த படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக இவர் நடித்த லக்கி பாஸ்கர் திரைப்படம் தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

4 / 6

இதனையடுத்து தமிழிலும் வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கொலை படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஆர்ஜே பாலாஜிக்கு ஜோடியாக சிங்கப்பூர் சலூன் படத்திலும் அவர் நடித்திருந்தார்.

5 / 6

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக தி கோட் படத்தில் மீனாட்சி சௌத்ரி நடித்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

6 / 6

இந்த நிலையில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.