2026 மத்திய பட்ஜெட்.. வருமான வரி குறித்து எழும் முக்கிய எதிர்பார்ப்புகள்! | TV9 Tamil News

2026 மத்திய பட்ஜெட்.. வருமான வரி குறித்து எழும் முக்கிய எதிர்பார்ப்புகள்!

Published: 

26 Jan 2026 22:58 PM

 IST

Expectation on Income Tax | பிப்ரவரி 1, 2026 அன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், 2026 பட்ஜெட்டில் வருமான வரி குறித்து எழுந்துள்ள எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

1 / 5பிப்ரவரி 01, 2026  அன்று 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பார்ப்புகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், வரி செலுத்தும் நபர்களிடம் இருந்து பட்ஜெட் குறித்த சில எதிர்ப்பார்புகள் எழுந்துள்ளன.

பிப்ரவரி 01, 2026  அன்று 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்பார்ப்புகளை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில், வரி செலுத்தும் நபர்களிடம் இருந்து பட்ஜெட் குறித்த சில எதிர்ப்பார்புகள் எழுந்துள்ளன.

2 / 5

புதிய வரி முறையின் கீழ் மாத சம்பளம் பெறும் நபர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் நபர்கள் ரூ.75,000 நிலையான கழிவை பெறுகின்றனர். இந்த நிலையில், இந்த தொகையை குறைந்தபட்சம் ரூ.1 லட்சமாகவும் அல்லது ரூ.1.5 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

3 / 5

தற்போது பழைய வரி முறையின் கீழ் மட்டுமே சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய வருமான வரி முறையின் கீழும் சுகாதார காப்பீட்டு பிரீமியங்களுக்கும் வருமான வரி விலக்கு சலுகை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

4 / 5

வீட்டு விலைகள் அதிகரித்து வருவதாலும், வரிச் சலுகைகள் குறைவாக உள்ளதாலும் வரி செலுத்துவோருக்கு வீடு கட்டுவோருக்கு வீடு வாங்குவது எட்டா கனியாக மாறியுள்ளது. எனவே வீட்டுக் கடன் மீதான வட்டி கழிவை ரூ.5 லட்சம் வரை உயர்த்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. 

5 / 5

வாடகைக்கு விடப்பட்ட சொத்துக்களுக்கான வருமான வரி கணக்கீட்டை எளிதாக்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி வரி செலுத்துவோர் உண்மையான வாடகை வருமானத்தின் அடிப்படையில் வரி விதிக்கப்பட வேண்டும்.