வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்! | TV9 Tamil News

வங்கியில் கடன் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Updated On: 

10 Apr 2026 14:10 PM

 IST

Check These Things Before Loan | பெரும்பாலான நபர்கள் தங்களுக்கு நிதி தேவை ஏற்படும்போது வங்கியில் கடன் வாங்குகின்றனர். ஆனால், ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் அவர்கள் செய்யும் சில தவறுகள் அவர்களை மேலும் அதிக நிதி சுமையை சுமக்க வைக்கும் வாய்ப்பு உள்ளது.

1 / 6மனிதர்கள் தங்களது எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஒருவேளை எதிர்கால தேவைகளுக்காக திட்டமிட்டு முதலீடு செய்யவில்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும்.

மனிதர்கள் தங்களது எதிர்கால தேவைகளுக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஒருவேளை எதிர்கால தேவைகளுக்காக திட்டமிட்டு முதலீடு செய்யவில்லை என்றால் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் நிலை ஏற்படும்.

2 / 6

அவ்வாறு நிதி சிக்கல்களில் சிக்கிக்கொள்ளும் பெரும்பாலான நபர்கள் தேடி செலவ்து வங்கி கடனை தான். ஏற்கனவே நிதி சுமையில் இருக்கும் நபர்கள் வங்கி கடன் வாங்கும்போது செய்யும் இந்த தவறுகள் அவர்களை மேலும் நிதி சிக்கல்களில் தள்ளிவிடும். எனவே வங்கிகளில் கடன் வாங்குவதற்கு முன்பு யோசிக்க வேண்டிய முக்கிய சில விஷயங்கள் உள்ளன. 

3 / 6

வங்கியில் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சமாக வட்டி விகிதம் உள்ளது. வட்டி விகிதத்தில் உள்ள சிறிய வித்தியாசம் கூட பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே குறைந்த வட்டி மற்றும் கட்டணம் விதிக்கும் வங்கிகளை தேர்வு செய்து கடனுக்கு விண்ணப்பிப்பது சிறப்பானதாக இருக்கும். 

4 / 6

பெரும்பாலான நபர்கள் எவ்வளவு தொகையை வங்கியில் இருந்து வாங்குகிறோம் என்பதை மட்டுமே கவனிக்கின்றனர். ஆனால், எவ்வளவு தொகையை திருப்பி செலுத்த வேண்டும், பிராசசிங் கட்டணம் எவ்வளவு என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியவது அவசியம். காரணம், அனைத்து தொகையையும் கடன் வாங்கும் நபரே திருப்பி செலுத்த வேண்டும். 

5 / 6

கடனை வாங்குவதை போலவே அதனை திருப்பி செலுத்துவதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. பெரும்பாலான நபர்கள் குறைந்த மாத தவணை செலுத்தி நீண்ட நாட்களுக்கு கடனை திருப்பி செலுத்தலாம் என நினைக்கின்றனர். ஆனால், அது முற்றிலும் தவறான முறை.

6 / 6

குறைந்த மாத தவணை உடன் அதிக காலம் திருப்பி செலுத்தினால் அதிக தொகை செலுத்த வேண்டும். இதுவே அதிக மாத தவணை உடன் குறைந்த காலத்தில் கடனை திருப்பி செலுத்தினால் குறைந்த தொகையை திருப்பி செலுத்தி கடனை அடைத்துவிடலாம். எனவே இது குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 

Follow Us