கிரீன் டீ vs பிளாக் டீ.. உடலுக்கு சிறந்தது எது? முழு விவரம் அறியலாம்!! | TV9 Tamil News

கிரீன் டீ vs பிளாக் டீ.. உடலுக்கு சிறந்தது எது? முழு விவரம் அறியலாம்!!

Published: 

14 Jan 2026 15:08 PM

 IST

Black tea vs Green tea: கிரீன் டீ-யானது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. உடல் எடை குறைப்பு முயற்சிக்கு துணை புரிவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிளாக் டீ-யனாது இரத்த அழுத்தத்தை சீராக்க உதவுகின்றன, செரிமானத்தை மேம்படுத்துகின்றன. இரத்த சர்க்கரையின் மாற்றத்தை கட்டுப்படுத்த உதவுவதாக சில ஆய்வுகள் கூறுகின்றன.

1 / 5வழக்கமான டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து க்ரீன் டீ அல்லது பிளாக் டீ குடிப்பதை தற்போது பெரும்பாலானோர் வழக்கமாக்கி வருகின்றனர். அந்தவகையில், கிரீன் டீ, பிளாக் டீ இரண்டும் லட்சக்கணக்கான மக்களால் தினமும் குடிக்கப்படும் பானங்களாக உள்ளன. ஒரே தேயிலை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் இவ்விரு பானங்களும் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவற்றின் செயலாக்க முறை, சுவை, மற்றும் உடலுக்கு தரும் நன்மைகள் எனப் பல அம்சங்களில் வெவ்வேறுபடுகின்றன.

வழக்கமான டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து க்ரீன் டீ அல்லது பிளாக் டீ குடிப்பதை தற்போது பெரும்பாலானோர் வழக்கமாக்கி வருகின்றனர். அந்தவகையில், கிரீன் டீ, பிளாக் டீ இரண்டும் லட்சக்கணக்கான மக்களால் தினமும் குடிக்கப்படும் பானங்களாக உள்ளன. ஒரே தேயிலை இலைகளிலிருந்து தயாரிக்கப்படும் இவ்விரு பானங்களும் ஒரே மாதிரியாக தோன்றினாலும், அவற்றின் செயலாக்க முறை, சுவை, மற்றும் உடலுக்கு தரும் நன்மைகள் எனப் பல அம்சங்களில் வெவ்வேறுபடுகின்றன.

2 / 5

தேயிலை இலைகள் அனைத்தும் Camellia sinensis என்ற ஒரே செடியிலிருந்து பெறப்படுகின்றன. ஆனால், கிரீன் டீ-யானது தேயிலை இலைகளை சேகரித்த உடனே குறைந்த செயலாக்கத்துடன் தயாரிக்கப்படுகிறது. இதில் ஆக்சிடேஷன் நடக்காத காரணத்தால் இலைகளின் இயற்கையான ஊட்டச்சத்துக்கள் பெரும்பாலும் அப்படியே காக்கப்படுகின்றன. அதேநேரம், பிளாக் டீ-யானது இலைகள் சேகரிக்கப்பட்ட பிறகு முழுமையாக ஆக்சிடேஷன் செய்யப்படுகிறது. இந்த செயல்முறையால் நிறம் கருமையாக மாறி சுவை தீவிரமாகிறது.

3 / 5

கிரீன் டீ-யில் பொதுவாக காஃபின் அளவு குறைவாக இருக்கும், இதனால் மனஅழுத்தத்திற்கும், எச்சரிக்கை உணர்விற்கும் நல்ல அமைதியை வழங்கலாம். அதிக சுறுசுறுப்பைத் தராமல் மெதுவாக செயல்படும். ஆனால், பிளாக் டீ-யில் சற்று அதிகமான காஃபின் இருக்கும், இது அதிக எச்சரிக்கை மற்றும் புத்துணர்ச்சி உணர்வை தரலாம். குறிப்பாக உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க நினைப்பவர்கள் பெரிதும் நாடுவது க்ரீன் டீயைத்தான். க்ரீன் டீ பல்வேறு உடல்நலப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கிறது. அதேசமயம், பிளாக் டீ-யும் செரிமானத்தை வலுப்படுத்துவதன் மூலம் உடல் எடை கட்டுப்பாட்டிற்கு மறைமுகமாக உதவுகிறது.

4 / 5

கிரீன் டீ மற்றும் பிளாக் டீ ஆகிய இரண்டுமே நன்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான பானங்களாக தான் உள்ளன. இரண்டுக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடியவையாக உள்ளன. அதேபோல், ஒரே வார்த்தையில் இதுதான் சிறந்தது என்றும் கூற முடிஇயாது. ஏனெனில், சில நபர்களுக்கு உள்ள உடல்நிலை மற்றும் நோய்தொற்றுகளின் அடிப்படையில் தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு இதில் ஒன்று சிறந்ததாக இருக்கலாம்.

5 / 5

எடை குறைக்க விரும்புபவர்கள் கிரீன் டீ-யிற்கு சற்று முன்னுரிமை வழங்கலாம். பிளாக் டீ இதய ஆரோக்கியம் மற்றும் செரிமானத்துக்கு நல்லது. உண்மையிலேயே வழக்கமான பாலில் செய்யப்படும் டீயை குடிக்கும் ஒவ்வொருவருக்கும், பிளாக் டீ, கிரீன் டீ இரண்டுமே சிறந்த ஆரோக்கியத்தை தருபவை தான். இவற்றில் ஒன்றை ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று கப் வரை மட்டுப்படுத்தி குடித்தால் உடலுக்கு முழு நன்மையும் கிடைக்கும்.