கர்த்தவ்யா பாதை குடியரசு தின பேரணி.. 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு! | TV9 Tamil News

கர்த்தவ்யா பாதை குடியரசு தின பேரணி.. 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு!

Updated On: 

20 Jan 2026 16:14 PM

 IST

77th Republic Day Celebration | ஜனவரி 26, 2026 அன்று இந்தியா தனது 77வது குடியரசு தின விழாவை கொண்டாட உள்ளது. இந்த நிலையில், டெல்லியின் கர்த்தவ்யா பாதையில் நடைபெற உள்ள குடியரசு தின சிறப்பு பேரணிக்கு 10,000 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 / 5இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஜனவரி 26, 2026 அன்று தனது 77வது குடியரசு தின விழாவை கொண்டாட இந்தியா தயாராகி வருகிறது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு ஆழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 அன்று குடியரசு தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அந்த வகையில் ஜனவரி 26, 2026 அன்று தனது 77வது குடியரசு தின விழாவை கொண்டாட இந்தியா தயாராகி வருகிறது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு ஆழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2 / 5

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள கர்த்தவ்யா பாதையில் குடியரசு தினத்தன்று சிறப்பு பேரணி நடைபெற உள்ளது. இந்த சிறப்பு நிகழ்சிக்குக்கு தான் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு ஆழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிம் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கிய பங்காற்றியவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

3 / 5

நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்களை பெருமைப்படுத்தும் வகையில் இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த சிறப்பு விருந்தினர்கள் கர்த்தவ்யா பாதையில் அமர வைக்கப்படுவர். இந்த நிகழ்ச்சிக்கு வரும் விருந்தினர்கள் டெல்லியின் முக்கிய பகுதிகளை சுற்றிப்பார்க்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

4 / 5

அதாவது, குடியரசு தின விழா கொண்டாட்டத்திற்கு வரும் சிறப்பு விருந்தினர்கள்,  டெல்லியில் உள்ள தேசிய  போர் நினைவிடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை சுற்றிப்பார்க்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், அந்த அந்த துறை அமைச்சர்கள் உடன் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

5 / 5

இவ்வாறு 10,000 சிறப்பு விருந்தினர்கள் குடியரசு தின சிறப்பு பேரணிக்கு வர உள்ள நிலையில், கர்த்தவ்யா பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, டெல்லி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.