காஷ்மீர் மக்களை நொடி பொழுதில் காப்பாற்றிய இந்தியாவின் S-400 ஆயுதம்… சிறப்புகள் என்ன?
India Pakistan Conflict : பாகிஸ்தான் 2025 மே 8ஆம் தேதி இரவு நடத்திய ட்ரோன் தாக்குதலை s-400 என்ற வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியது. இந்த வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் காஷ்மீர் மக்களை இந்தியா காப்பாற்றியது. எனவே, இந்த s-400 என்ற பாதுகாப்பு அமைப்பின் சிறப்புகள் என்ன? அது எப்படி செயல்படுகிறது என்ற விவரங்களை பார்ப்போம்.

S 400 பாதுகாப்பு அமைப்பு
காஷ்மீர், மே 09: ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் 2025 மே 8ஆம் தேதியான இரவு தாக்குதல் நடந்த முயன்றது. இந்த தாக்குதல் இந்தியா பாகிஸ்தான் இடையே மேலும் பதற்றத்தை அதிகரித்தது. ஜம்மு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்றது. அதாவது, அவந்திபுரா, ஸ்ரீநகர், ஜம்மு, பதான்கோட், அமிர்தசரஸ், கபுர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பட்டிண்டா, சண்டிகர், நல், பலோடி, உத்தர்லாய் மற்றும் பூஜ் ஆகிய இடங்களை குறிவைக்க முயன்றது. இதனை S-400 என்ற பாதுகாப்பு அமைப்பு அதனை முறியடித்தது. கிட்டதட்ட 35 நிமிடங்கள் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக தெரிகிறது. இதனை அனைத்தையும் இந்தியா S-400 என்ற பாதுகாப்பு அமைப்பு மூலம் கட்சிதமாக சுட்டு வீழ்த்தியுள்ளது. 16 ட்ரோன்களையும், இரண்டு ஏவுகணைகளையும் இந்தியா இடை மறித்தது.
S-400 என்ற பாதுகாப்பு அமைப்பு
இதற்கு பின்னணியில் இருப்பது S-400 என்ற பாதுகாப்பு அமைப்பு தான். இந்த வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் தான் பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்தியாவிற்குள் வரவில்லை. எனவே, இந்த S-400 என்ற பாதுகாப்பு அமைப்பின் சிறப்புகள் என்ன.. பலம் என்ன என்பதை பற்றி பார்ப்போம். இந்திய விமானப்படை s-400 என்ற சுதர்சன சக்கர வான் தடுப்பு ஏவுகணை அமைப்பை வைத்துள்ளது. இதை வைத்து தான் பாகிஸ்தான் தாக்குதல் முறியடிக்கப்பட்டன.
S-400 என்ற பாதுகாப்பு அமைப்பு உலகின் மிகவும் நீண்ட தூர வான் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கிய முதல் நாடு சீனா ஆகும். ரஷ்யா இந்த S-400 வான் பாதுகாப்பு அமைப்பு தயாரித்தது. 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவிடம் இருந்து ஐந்து S-400 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியது.
இதன் மதிப்பு ரூ.90,000 கோடி என்று சொல்லப்படுகிறது. இந்த S-400 வான் பாதுகாப்பு அமைப்பு அதிக தூரம் பயணிக்கும் பெரிய ஏவுகணைகளை முறியடிக்கும் தன்மை கொண்டது. S-400 வான் பாதுகாப்பு அமைப்பு 400 கி.மீ தூரம் வரை தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இதில் லாஞ்சர்கள், ரேடார்கள், கட்டுப்பாடு மையங்கள் என 16 வாகனங்கள் உள்ளன.
பலம் என்ன?
இந்த வான் பாதுகாப்பு அமைப்பு 600 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை கண்காணித்து, 400 கிலோ மீட்டர் வரம்பிற்கு தாக்கும். இது முழு பேட்டரி என்றும் அழைக்கப்படுகிறது. இது 120, 200, 250, 400 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டது. இது இந்தியாவின் பெரிய தூணாக செயல்படுகிறது. இதனை வைத்து தான், பாகிஸ்தானின் ட்ரோன்களை ஒரே நேரத்தில் சுட்டு வீழத்தியது.
அதே நேரத்தில், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களில் இருந்து தனது எல்லையைப் பாதுகாக்க பாகிஸ்தான் சீனாவிடமிருந்து HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை வாங்கியுள்ளது. ரஷ்யாவின் S-300 ஐ அடிப்படையாகக் கொண்டு சீனா இந்த வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியது. இது S-400 ஐ விட பலவீனமான வான் பாதுகாப்பு அமைப்பாகும். HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பு 200 கிமீ தூரத்தில் கண்டறிந்து, அழிக்கு திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.