ராஜஸ்தானில் சிக்கிய பாகிஸ்தான் விமானப்படை விமானி.. உறுதி செய்த உளவுத்துறை..!

Pakistan Air Force Pilot Arrested: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் விமானப்படையை சேர்ந்த விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் விமானி கைதுசெய்யப்பட்டத்தை உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் விமானப்படையின் எஃப் 16 சூப்பர் சோனிக் போர் விமானம் இந்திய தரையிலிருந்து வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தானில் சிக்கிய பாகிஸ்தான் விமானப்படை விமானி.. உறுதி செய்த உளவுத்துறை..!

பாகிஸ்தான் போர் விமானம்

Updated On: 

08 May 2025 23:29 PM

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் விமானப்படையை சேர்ந்த விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் விமானி கைதுசெய்யப்பட்டத்தை உளவுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மற்றும் பார்மர் மாவட்டங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்த முயற்சித்த பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக, ஜெய்சால்மரில் முழுமையான மின் தடை ஏற்பட்டுள்ளது. இந்த மின் தடை இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணிவரை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் விமானப்படை அதிகாரி கைது:

பாகிஸ்தான் விமானப்படையின் எஃப் 16 சூப்பர் சோனிக் போர் விமானம் இந்திய தரையிலிருந்து வான் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய விமானப்படை நிலையமான பாகிஸ்தானில் உள்ள சர்கோதா விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட போர் விமானம், சர்கோதா விமானப்படை தளத்திற்கு அருகில் இந்திய SAM மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தானின் F-16 போர் விமானத்தின் விமானி இந்திய ராணுவத்தினரால் உயிருடன் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த F-16 விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். 2019 ஆம் ஆண்டு இந்தியாவின் பாலகோட் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு இந்த விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது.