Operation Sindoor : 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.. ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசிய ராஜ்நாத் சிங்!
100 Terrorists Killed in Operation Sindoor | பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், சிந்தூர் தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் குறித்த விவரங்கள உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார்.

ராஜ்நாத் சிங்
டெல்லி, மே 08 : ஆபரேஷன் சிந்தூரில் (Operation Sindoor) பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை சுமார் 100 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் (Defence Minister Rajnath Singh) தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (மே 08, 2025) நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த நிலையில், இன்றைய அனைத்து கட்சி கூட்டத்தில் என்ன நடந்தது, சிந்தூர் ஆபரேஷன் குறித்து அமைச்சர் ராஜ்னாத் சிங் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆபரேஷன் சிந்தூரில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய ராணுவம்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் (Jammu and Kashmir), பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதற்கு காரணமாக பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) பயங்கரவாதிகளுக்கு உரிய பாடம் கற்பிக்கும் வகையில் இந்திய அரசு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) திட்டத்தை அறிவித்து பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மே 06, 2025 முதல் பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாம்களின் மீது இந்திய ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. இவ்வாறு ஆபரேஷன் சிந்தூரை இந்திய ராணுவம் தீவரமாக செயல்படுத்தி வரும் நிலையில், அது குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சில தகவல்களை முன்வைத்துள்ளார்.
அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர்கள்
#WATCH | Delhi | Congress MP & LoP Rajya Sabha Mallikarjun Kharge and LoP Lok Sabha Rahul Gandhi arrive at the Parliament Annexe building to attend the all-party meeting called by the Centre pic.twitter.com/SyZVCrBdbd
— ANI (@ANI) May 8, 2025
அனைத்து கட்சி கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்திய அரசு சிந்தூர் தாக்குதலை தீவிரமாக செயல்படுத்தி வரும் நிலையில், இன்று (மே 08, 2025) அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார். சிந்தூர் தாக்குதல் உயிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகாத நிலையில், அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இது நடந்துக்கொண்டு இருக்கும் நடவடிக்கை என்றும், எனவே தொழில்நுட்ப விளக்கத்தை அளிக்க முடியாது என்றும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.