இனி இந்திய குடியுரிமையை நிரூபிக்க இந்த 2 சான்றிதழ்கள் கட்டாயம்! ஆதார், ரேசன் கார்டுகள் பயன்படாது!

இந்திய குடியுரிமையை நிரூபிக்க இனி ஆதார், பான் மற்றும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்த முடியாது. அவற்றுக்கு பதிலாக ஒருவர் இந்திய குடியுரிமை பெற்றவர் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ்கள் மட்டுமே அங்கீகரிக்கப்படும் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இனி இந்திய குடியுரிமையை நிரூபிக்க இந்த 2 சான்றிதழ்கள் கட்டாயம்! ஆதார், ரேசன் கார்டுகள் பயன்படாது!

Updated Citizenship Document Rules

Updated On: 

30 Apr 2025 16:24 PM

மத்திய அரசு குடியுரிமை (Citizenship) தொடர்பான புதிய முடிவை அறிவித்துள்ளது.  அதன் படி இனி ஆதார் கார்டு (Aadhar Card), பான் கார்டு, மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றை இந்திய குடியுரிமையின் சட்டபூர்வமான ஆதாரங்களாக கருதப்படாது. இதற்கு முன் இதனை நாம் குடியுரிமைக்கான ஆதாரமாக பயன்படுத்தி வந்தாலும் இனிமேல் அதனை ஆதாரமாக பயன்படுத்த முடியாது. முன்பு இந்த 3 ஆவணங்களில் ஒன்று இருந்தாலே அது இந்திய குடியுரிமை உடையவர் என்று கருதப்பட்டது. தற்போது வந்துள்ள அறிவிப்பின் படி இனி அதனை குடியுரிமைக்கான ஆதாரமாக கருதப்படாது.  பல வெளிநாட்டை சேர்ந்த நபர்கள் குடியுரிமைக்கான ஆதாரமாக ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுவரை குடியுரிமையை உறுதி செய்யும் ஆவணங்கள்

பொதுவாக இந்தியாவில் பல அடையாள ஆவணங்கள்  நடைமுறையில் உள்ளன. அவற்றில் ஆதார் கார்டு, பான் கார்டு, மற்றும் ரேஷன் கார்டு முக்கியமாக பயன்படுகின்றன. ஆனால் இந்த ஆவணங்கள் எந்தவொரு நபரின் குடியுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் அல்ல என மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.  ஆதார் கார்டு என்பது ஒருவரின் அடையாளம் மற்றும் வசிப்பிடம் ஆகியவற்றை உறுதிப்பத்தும் ஆவணமாக செயல்படுத்தப்படுகிறது. அதேபோல், பான் கார்டு வரி தொடர்பான ஆவணமாகும். ரேஷன் கார்டு உணவு விநியோகத்திற்கு மட்டுமே பயன்படுகிறது, இனி இதனை குடியுரிமையை உறுதிப்படுத்தும் ஆவணமாக பயன்படுத்தப்படாது.

இந்திய குடியுரிமைக்கான ஆவணங்கள்

இந்திய அரசின் முக்கியமான குடியுரிமை ஆவணங்கள் என்றால் பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ்கள் மட்டும் தான். ஒருவருக்கு அளிக்கப்படும் பிறப்புச் சான்றிதழ் என்பது அந்த நபர் இந்தியாவில் பிறந்ததை உறுதிப்படுத்துகிறது. இது இந்திய குடியுரிமையை நிரூபிக்கும் முக்கியமான ஆவணமாகும். குடியுரிமைச் சான்றிதழ்கள் என்பது நபர் ஒருவர் இந்திய பகுதிகளில் வசித்து வருவதை உறுதி செய்கிறது. இதனால் இந்திய குடியுரிமை நிரூபிக்கப்படுகிறது. பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ்கள் இவை இந்திய குடியுரிமையை நிரூபிப்பதற்கான சட்டபூர்வமான ஆவணங்கள் ஆகும்.

யாருக்கு சிக்கல்?

இந்த முடிவு குறிப்பாக பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ்கள் இல்லாத நபர்களுக்கு பாதிப்பாக அமையும். இவர்கள் இதுவரை ஆதார், பான், ரேஷன் போன்ற அடையாள ஆவணங்களாக பயன்படுத்தியிருப்பார்கள்.  ஆனால் அவை குடியுரிமை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்களாக இனி இருக்காது.  இந்த மாற்றம் முக்கியமாக பாஸ்போர்ட் பெறுதல், மற்றும் நீதிமன்றங்களில் குடியுரிமை உறுதிப்படுத்த வேண்டிய சமயங்களில் தேவையாக இருக்கும். இதனால், பிறப்பு மற்றும் குடியுரிமைச் சான்றிதழ்கள் எளிதாக கிடைக்கும். அதேபோல் அவற்றை பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும்.

பிறப்புச் சான்றிதழ்கள் மற்றும் குடியுரிமைச் சான்றிதழ்கள் இல்லாமல் குறைந்தபட்சம் எந்த ஒரு நபரும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க முடியாது. எனவே, இந்த ஆவணங்களை பெற்றுக்கொள்வது முக்கியம். தகுந்த நாகரிகத்தோடு அந்த ஆவணங்களை பதிவு செய்து, உண்மையான குடியுரிமை நிலையை உறுதி செய்துகொள்வது அவசியம்.