பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது.. செய்தி சேனல்களுக்கு NBDA அறிக்கை!

NBDA Bans Pakistani Guests on News Channels | பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்திய செய்தி சேனல்களின் நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில், NBDA பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது என தடை விதித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாகிஸ்தானை சேர்ந்தவர்களை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது.. செய்தி சேனல்களுக்கு NBDA அறிக்கை!

மாதிரி புகைப்படம்

Published: 

04 May 2025 23:07 PM

சென்னை, மே 04 : NBDA (News Broadcasters and Digital Association) அமைப்பு, செய்தி சேனல்கள் பாகிஸ்தானை சேர்ந்தவர்களை தங்களது நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனம் வெளுயிட்டுள்ள செய்தி அறிக்கை தற்போது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. பஹல்காம் (Pahalgam) தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், தனிப்பட்ட அமைப்புகளும் முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், NBDA இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியான 26 பேர்

ஜம்மு காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (The Resistance Front) என்ற அமைப்பு பொறுப்பேற்ற நிலையில் கடும் கோபம் அடைந்த இந்தியா, பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக அட்டாரி – வாகா எல்லை மூடல், சிந்து நதி நீர் திறுத்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தானியர்களின் விசா ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பஹல்காம் தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், இந்திய அரசு மட்டுமன்றி பல்வேறு அமைப்புகளும் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.

இணையத்தில் வைரலாகும் அறிக்கை

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவும் இந்த கடும் மோதல் காரணமாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்திய செய்தி ஊடகங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி வருகின்றனர். இந்த நிலையில், இது தேசத்திற்கு எதிரான செயல் என்று செய்தி சேனல்கள் உடனடியாக இதனை நிறுத்த வேண்டும் என்றும் NBDA உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான NBDA அறிக்கை இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.