NITI Aayog Meeting: பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்.. இந்தியாவின் வளர்ச்சி, மாநில வளர்ச்சி குறித்து கலந்துரையாடல்..!
PM Narendra Modi: புதுடெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில், தென் இந்தியாவைச் சேர்ந்த மூன்று முதலமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா முதலமைச்சர்கள் கலந்து கொண்டு தங்களது மாநில பிரச்சினைகளை எடுத்துரைத்தனர். 2047-ல் வளர்ந்த இந்தியாவிற்கான வளர்ந்த மாநிலங்களை உருவாக்குவது குறித்தும், நகரமயமாக்கல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம்
டெல்லி, மே 24: பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi) தலைமையில் இன்று அதாவது 2025 மே 24ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் (Niti Aayog Meeting) தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் புதுச்சேரி உட்பட தென்னிந்தியாவை சேர்ந்த 3 முதலமைச்சர்கள் பங்கேற்கவில்லை. அதேநேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu CM MK Stalin), ஆந்திர பிரதேச முதலமைச்சர் என்.சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு அந்தந்த மாநிலங்கள் தொடர்பான பிரச்சனைகளை கவுன்சிலில் முன் வைத்தனர். காங்கிரஸ் ஆளும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், மாநில நிதியமைச்சரை தனக்கு பதிலாக அனுப்பினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூட்டம்:
Prime Minister, Shri Narendra Modi chairs the 10th Governing Council Meeting of NITI Aayog at Bharat Mandapam in New Delhi today on the theme, Viksit Rajya for Viksit Bharat@2047.
The meeting provides a platform for the Centre and States/UTs to deliberate on measures to advance… pic.twitter.com/5uZ2ecZxar
— NITI Aayog (@NITIAayog) May 24, 2025
பிரதமர் நரேந்திர மோடி 2025 மே 24ம் தேதியான இன்று நிதி ஆயோக்கின் 10வது நிர்வாக குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் லெப்டினண்ட் கவர்னர்கள் மற்றும் மூத்த மத்திய அமைச்சர்களை ஒன்றிணைத்து ‘2047ல் வளர்ந்த இந்தியாவிற்கு வளர்ந்த மாநிலங்கள்’ என்ற கருப்பொருளில் கலந்துரையாடினார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “ இந்தியாவின் வளர்ச்சியின் வேகத்தை மேலும் விரைவிபடுத்துவது காலத்தி தேவை. மத்திய, மாநில அரசுகள் டீம் இந்தியா போல இணைந்து செயல்பட்டால், எந்த இலக்கும் சாத்தியமற்றது அல்ல. வளர்ந்த இந்தியாவே, ஒவ்வொரு இந்தியரின் இலட்சியம்.
ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சியடையும்போது, இந்தியாவும் வளர்ச்சியடையும். இதுவே 140 கோடி குடிமக்களின் விருப்பமாகும். மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் குறைந்தபட்சம் ஒரு சுற்றுலா தலத்தையாவது உலகத் தரத்தின்படி அனைத்து வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளுடன் மேம்படுத்த வேண்டும். ’ஒரு மாநிலம்: ஒரு உலகளாவிய இலக்கு’ என்ற குறிக்கோளுடன் நாம் முன்னேற வேண்டும். இது அருகிலுள்ள நகரங்களை சுற்றலா தலங்களாக மேம்படுத்துவதற்கு வழி வகுக்கும்” என்று கூறினார்.
நகரமயமாக்கல் குறித்து பிரதமர் மோடி:
10வது நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா வேகமாக நகரமயமாக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்திற்கு நகரங்களை தயார்படுத்துவதில் நாம் பாடுபட வேண்டும். மேம்பாடி, புதுமை மற்றும் நிலைத்தன்மை ஆகியவை நமது நகரங்களின் வளர்ச்சியின் இயந்திரங்களாக இருக்க வேண்டும். ” என்று தெரிவித்தார்.
நிதி ஆயோக்கின் உச்ச அமைப்பான நிர்வாக குழுவில், அனைத்து முதலமைச்சர்கள், யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் மற்றும் பல மத்திய அமைச்சர்கள் உள்ளனர். அதேநேரத்தில், பிரதமர் மோடி நிதி ஆயோக்கின் தலைவராக உள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாத கட்டமைப்புகளுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் முதல் முக்கிய சந்திப்பு இதுவாகும்.