ராவாக 5 பாட்டில் சரக்கு அடித்த இளைஞர்.. பறிபோன உயிர்.. பந்தயத்தால் வந்த வினை!

Crime News : கர்நாடகாவில் நண்பர்களுடன் பந்தயம் கட்டி, 5 பாட்டில் மதுவில் தண்ணீர் சேர்க்காமல் ராவாக இளைஞர் குடித்ததால், உயிரிழந்துள்ளார். 10,000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, இளைஞர் 5 பாட்டில் மதுவை குடித்துள்ளார். இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராவாக 5 பாட்டில் சரக்கு அடித்த இளைஞர்.. பறிபோன உயிர்.. பந்தயத்தால் வந்த வினை!

உயிரிழந்த இளைஞர்

Updated On: 

01 May 2025 12:47 PM

கர்நாடகா, மே 01: கர்நாடகாவில் 21 வயது இளைஞர் 5 பாட்டில் மது குடித்ததை அடுத்து, அவர் உயிரிழந்துள்ளார். மதுவில் தண்ணீர் எதுவும் சேர்க்காமல் ராவாக அப்படியே 5 பாட்டில் குடித்துள்ளார். இதனை அடுத்து, அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (21). இவருக்கு கடந்த ஓராண்டுக்கு திருமணம் நடந்துள்ளது. இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். இதனால், பிரசவத்திற்காக தாய் வீட்டிற்கு சென்ற அவருக்கு, 10 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்துள்ளது. கார்த்திக் குடிப்பழகத்திற்கு அடிமையானவர். அடிக்கடி நண்பர்களுடன் மது குடிப்பதை வழக்கமாக்கி உள்ளார்.

ராவாக 5 பாட்டில் சரக்கு அடித்த இளைஞர்

இந்த நிலையில், கடந்த வாரம் கார்த்திக் தனது நண்பர்களுடன் மது குடித்துக் கொண்டு இருந்தார். நண்பர்கள் வெங்கட ரெட்டி, சுப்ரமணி ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் மூன்று பேரும் மதுவில் ஒரு சொட்டு தண்ணீர் சேர்க்காமல் ராவாக அடித்தால், ரூ.10,000 தருவதாக அவர்கள் பந்தயம் கட்டினர்.

இந்த சவாலை ஏற்றுக் கொண்ட கார்த்திக், 5 பாட்டில் மதுவிலும் தண்ணீர் சேர்க்காமல் குடித்துள்ளார். குடித்த சில மணி நேரத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார். உடனே, அவரை மரு கோலார் மாவட்டத்தில் உள்ள முல்பாகலில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வெங்கட ரெட்டி, சுப்ரமணி உள்ளிட்ட ஆறு பேர் மீது நங்கலி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பறிபோன உயிர்

ராவாக ஐந்து பாட்டி மதுவை குடித்த இளைஞர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 2.6 மில்லியன் மக்கள் மது அருந்துவதால் இறக்கின்றனர் என்று கூறியுள்ளது. மது குடிப்பதால் புற்றுநோய், டைப் 2 நீரிழிவு நோய் வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. எவ்வளவு குறைவாக குடிக்கிறீர்களோ, அவ்வளவு பாதுகாப்பானது என்று உலக சுகதார அமைப்பு கூறியுள்ளது.

தண்ணீர் கலக்காமல் ஒரே நேரத்தில் அதிகப்படியான மது அருந்துதல் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை சீர்குலைத்து கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். இதுபோன்று மது அருந்தினால் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மேலும், மூளையின் செயல்பாட்டை குறைத்து சுயநினைவை இழக்கச் செய்யலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதோடு, அதிகமாக மது அருந்துவது கல்லீரலை தான் முதலில் பாதிக்கும்.  எனவே, மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இதுபோன்ற பந்தயத்தில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.