புயல் காரணமாக நடுவானில் பறந்த விமானம் சேதம் – மரண பயத்தில் அலறிய பயணிகள் – வைரலாகும் வீடியோ

Flight turbulence shocks passengers : டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி சென்ற விமானம் திடீரென ஏற்பட்ட புயல் காரணமாக பாதிக்கப்பட்டது. விமானத்தின் முன் பகுதி சேதமடைந்தது. விமானம் குலுங்கியதால் பயணிகள் அலறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

புயல் காரணமாக நடுவானில் பறந்த விமானம் சேதம் - மரண பயத்தில் அலறிய பயணிகள் -  வைரலாகும் வீடியோ

புயல் காரணமாக பாதிக்கப்பட்ட இண்டிகோ விமானம்

Updated On: 

21 May 2025 22:31 PM

டெல்லி, மே 21: டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்கு சென்ற இண்டிகோ விமானம் (IndiGo Fligh) திடீர் புயல் மற்றும்  கனமழை (hailstorm) காரணமாக கடும் அதிர்வை சந்தித்த சம்பவம் பயணிகள் அனைவருக்கும் மரண பயத்தை ஏற்படுத்தியது. விமானத்தில் இருந்த 227 பயணிகளும், விமான ஊழியர்களும் உடனடியாக பாதுகாப்பாக வெளியேறினர் என்றாலும், அந்த ஒரு நிமிடம் பயணிகளுக்கு பயங்கரமான அனுபவமாக இருந்தது. டெல்லியில் இருந்து ஸ்ரீநகரை நோக்கி சென்ற விமானம் கடுமையான புயல் மற்றும் மழை காரணமாக விமானம் தடுமாறியது. . மேலும் விமானம் அதிர்வுகளை சந்தித்தால் அதில் பயணித்த பயணிகள் பயத்தில் கத்தத் தொடங்கினர்.

விமானத்தில் நிலவிய பதட்டமான சூழல்

திடீரென ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக அவர்கள் அமர்ந்திருந்த சீட், மேலே இருந்த பின் ஆகியவை மிக கடுமையாக குலுங்கின. இதன் காரணமாக கிட்டத்தட்ட  ஒரு நிமிடம் வரை  முழு விமானமும் பதட்டமான சூழ்நிலை நிலவியது. இந்த நிலையில் பைலட்கள் மற்றும் கேபின் ஊழியர்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனையடுத்து பயணிகளிடையே நிலவிய பதட்டம் தணிந்தது. இதுகுறித்து அந்த விமானத்தில் பயணித்த ஒருவர் தனது எக்ஸ் பதிவில், நான் அந்த விமானத்தில் இருந்தேன். அது உண்மையில் ஒரு மரணத்துக்கு நெருக்கமான அனுபவம். விமானத்தின் முன்பக்கம்  சேதமடைந்தது. பயணிகள் அனைவரும் பயத்தில் கத்திக்கொண்டிருந்தனர்,” என குறிப்பிட்டுள்ளார்.

பயத்தில் அலறிய பயணிகள்

 

விமானத்தின் முன் பக்கம் சேதம்

 

இண்டிகோ தரப்பில் வெளியான அறிக்கையில், விமான ஊழியர்கள் சரியான நடைமுறைகளை பின்பற்றி செயல்பட்டனர். இதன் காரணமாக விமானம் சரியாக 6:30 மணிக்கு ஸ்ரீநகர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது.  விமான பணியாளர்கள் பயணிகளின் நலனுக்கு கூடுதல் கவனம் செலுத்தினர். விமானம் பராமரிப்பு மற்றும் ஆய்விற்குப் பின்னரே மீண்டும் இயக்கப்படும்” என்று விளக்கமளித்துள்ளது.

சமூக வலைதளங்களில் பயணிகள் பாராட்டு

சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. பயணிகள் பெரும்பாலும் விமான ஊழியர்களின் பணியை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சிலர் “நாங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள், பைலட் மற்றும் விமான ஊழியர்களின் துரிதமான செயல் எங்களை காப்பாற்றியது” என்று குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories