India vs Pakistan Conflict: அது எங்கள் வேலை இல்லை – அமெரிக்க துணை அதிபர் அதிரடி

India Pakistan Conflict : பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வரும் நிலையில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ், இந்த விவகாரத்தில் அமெரிக்கா அதில் தலையிட மாட்டாது என தெரிவித்துள்ளார். மேலும் இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்தார்.

India vs Pakistan Conflict:  அது எங்கள் வேலை இல்லை - அமெரிக்க துணை அதிபர் அதிரடி

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

Updated On: 

09 May 2025 17:09 PM

பாகிஸ்தானின் (Pakistan) பயங்கரவாத தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா  தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க (America) வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிஃபை தொலைபேசியில் நேரடியாக தொடர்புகொண்டு கண்டித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்கள் குறித்து கடுமையான ஆட்சேபனைகளைத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்தியாவுடனான போர் பதட்டங்களைக் குறைக்க பாகிஸ்தான் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் போர் சூழ்நிலையை அமெரிக்கா விரும்பவில்லை என்றும், ஆனால் பயங்கரவாதப் பிரச்னையில் கருணை காட்டாது என்றும் ரூபியோ தெளிவுபடுத்தியிருக்கிறார். இதனையடுத்து ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு அமெரிக்காவின் எதிர்வினை பாகிஸ்தானுக்கு மாபெரும் பின்னடைவாக அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

அதே நேரத்தில், ரூபியோ இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை தொடர்பு கொண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்திருக்கிறார். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்கா இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா ஆதிரிப்பதாகவும் அவர் தெரிவித்திருப்பதா தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல்களை நடத்திய பிறகு, அந்நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் பதான்கோட் மீது பாகிஸ்தான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் முயற்சி தோல்வியடைந்திருக்கிறது.

அமெரிக்க துணை அதிபர் கருத்து

 

இந்தியா-பாகிஸ்தான் மோதல் குறித்து அமெரிக்க துணை அதிபர்  ஜே.டி. வான்ஸ் ஃபாக்ஸ் நியூஸுக்கு அளித்த பேட்டியில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். அப்போது பேசிய அவர், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரண்டும் அணுஆயுத சக்திகள். இவ்விருக்கும் மோதல் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியது. ஆனால் இது அமெரிக்காவின் நேரடி தலையீட்டிற்குரிய விஷயம் அல்ல. நாங்கள், எங்களால் முடிந்த அளவிற்கு அமைதியை நிலைநாட்ட விரும்புகிறோம்.

ஆனால், எங்களால் நேரடியாக இந்த விவகாரத்தில் தலையிட முடியாது. இது எங்கள் பிரச்னை இல்லை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்க்கோ ரூபியோ ஆகியோரும் இதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மோதல்  விரைவில் முடிவுக்கு வரவேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்” என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயசங்கர், அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்க்கோ ரூபியோவுடன் தொலைபேசி வழியாக பேசினார்.