India Pakistan Ceasefire: பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தம் – இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

India's Foreign Secretary Vikram Misri: பிற்பகல் 3.35 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ தலைமை இயக்குநர்கள் பேச்சு நடத்தினர். அப்போது இருநாட்டு உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சில் உடன்பாடு ஏற்பட்டதாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

India Pakistan Ceasefire: பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தம் - இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி

Updated On: 

10 May 2025 18:50 PM

அமெரிக்கா, மே 10: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கு இடையில் போர் நிறுத்தத்தை அறிவித்த சில நிமிடங்களுக்கு பிறகு, வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி (India’s Foreign Secretary Vikram Misri), இந்திய நேரப்படி 5 மணி முதல் நிலத்திலும், வான்வழியிலும், கடலிலும் அனைத்து துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்த ஒப்புக் கொண்டதாக (India Pakistan Ceasefire) கூறினார். மேலும், (மே 10, 2025) மதியம், பாகிஸ்தான் டிஜிஎம்ஓ ஒரு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு முன்முயற்சி எடுத்ததாகவும், அதன் பிறகு விவாதங்கள் நடைபெற்று ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும் கூறினார்.

இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி:

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல் இன்று அதாவது 2025 மே 10ம் தேதி மாலை 5 மணி முதல் நிறுத்தியதாக இந்தியா அறிவித்துள்ளது. இதுகுறித்து, இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவிக்கையில், “பாகிஸ்தானின் இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (DGMO) இன்று பிற்பகல் 3.35 மணிக்கு இந்திய இராணுவத் தளபதியை அழைத்தார். மாலை 5 மணி முதல் துப்பாக்கி சண்டையும், ராணுவ நடவடிக்கைகளையும் நிறுத்த இருநாடுகளும் முடிவு செய்துள்ளது. பிற்பகல் 3.35 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் இந்திய ராணுவ தலைமை இயக்குநர்கள் பேச்சு நடத்தினர். அப்போது இருநாட்டு உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் இடையிலான பேச்சில் உடன்பாடு ஏற்பட்டது. இராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் 2025 மே 12ம் தேதி மதியம் 12 மணிக்கு மீண்டும் பேசுவார்கள்.” என்று தெரிவித்தார்.

வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிவிப்பு:

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரும் பாகிஸ்தானுடனான போர் நிறுத்தம் குறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ இந்தியாவும் பாகிஸ்தானும் இன்று துப்பாக்கிச் சூடு மற்றும் இராணுவ நடவடிக்கையை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளன. பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக இந்தியா எப்போதும் உறுதியான மற்றும் அசைக்க முடியாத நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. எதிர்காலத்திலும் இது அதையே செய்யும்.” என்று தெரிவித்தார்.

டொனால்ட் டிரம்ப் என்ன சொன்னார்?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய இராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

Related Stories