e Passport : புதிய இ பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு.. என்ன சிறப்பு அம்சங்கள்!

India Launches e-Passport Scheme | பாஸ்போர்ட் சரிபார்த்தல் பல கட்டண சோதனைகளுக்கு உட்பட்டதாக உள்ளது. போலி பாஸ்போர்டுகளை கண்டறியும் வகையில் பாஸ்போர்ட் சரிபார்த்தல் சற்று கடினமாக உள்ளது. இந்த நிலையில் பாஸ்போர்ட் சரிபார்த்தலை எளிதாக்கவும், போலி பாஸ்போர்டுகளின் எண்ணிக்கையை குறைக்கவும் மத்திய அரசு ஒருன் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

e Passport : புதிய இ பாஸ்போர்ட் திட்டத்தை அறிமுகம் செய்த மத்திய அரசு.. என்ன சிறப்பு அம்சங்கள்!

இ பாஸ்போர்ட்

Published: 

15 May 2025 13:27 PM

வெளிநாட்டு பயணங்களின்போது பாஸ்போர்ட் சரிபார்த்தல் முறை சற்று கடினமாக உள்ள நிலையில், அதனை எளிதாக்கும் வகையிலும், பாதுகாப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, இந்திய அரசு இ பாஸ்போர்ட் சேவா (e Passport Seva) திட்டத்தின் கீழ் இ பாஸ்போர்டுகளை (e Passport) வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த இ பாஸ்போர்ட் மூலம் போலி பாஸ்போர்ட்கள் எண்ணிக்கை குறைகப்படுவது மட்டுமன்றி, வெளிநாட்டு பயணங்களின் போது பொதுமக்கள் சந்திக்கும் சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமாகவும் இது அமைந்துள்ளது. இந்த நிலையில், இந்த புதிய இ பாஸ்போர்ட் அறிமுகம் குறித்தும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக பார்க்கலாம்.

பாஸ்போர்ட் வெரிஃபிகேஷனால் சிக்கல்களை சந்திக்கும் பொதுமக்கள்

வெளிநாட்டு பயணங்களின்போது பாஸ்போர்ட் சரிபார்ப்பு சற்று கடினமானதாக உள்ளது. இந்த சரிபார்த்தல் நடைமுறையின் போது அதிகாரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்தால் மட்டுமே அதிகாரிகள் அனுமதி வழங்குவார்கள். இவ்வாறு பல கட்டங்களை தாண்டி பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதால் மத்திய அரசு இ பாஸ்போர்டை அறிமுகம் செய்யும் முடிவை கையில் எடுத்துள்ளது. சிப் பொருத்தப்பட்டுள்ள இந்த இ பாஸ்போர்டில், பயோமெட்ரிக் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் பொதுமக்கள் சந்திக்கும் சிக்கல்கள் குறைந்து போலி பாஸ்போர்ட்களின் பயன்பாடுகள் குறையும் என கூறப்படுகிறது.

இ பாஸ்போர்டை அறிமுகம் செய்யும் மத்திய அரசு

அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இ பாஸ்போர்டை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, 2024 ஏப்ரல் 1 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட பாஸ்போர்ட் சேவா 2.0 திட்டத்தின் ஒரு தொடர்ச்சியாக இந்த இ பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சோதனை மேற்கொள்ளப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சோதனை வெற்றி பெற்றால் விரைவில் இ பாஸ்போர்ட் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

முதலில் 13 நகரங்களுக்கு வழங்கப்படும் இ பாஸ்போர்ட்

இந்த இ பாஸ்போர்ட் சோதனை முயற்சியாக முதற்கட்டமாக நாக்பூர், புவனேஸ்வர், ஜம்மு மற்று காஷ்மீர், கோவா, சிம்லா, ராய்ப்பூர், ஜெய்ப்பூர், சென்னை, ஹைதராபாத், சூரத், ராஞ்சி, மற்றும் டெல்லி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சோதனை முயற்ச்சியாக இனி இந்த 13 நகரங்களில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு இ பாஸ்போர்ட் வழங்கப்படும் என்றும், அதனை தொடர்ந்து படிப்படியாக நாடு முழுவதும் இந்த இ பாஸ்போர்ட் முறை அமலுக்கு கொண்டுவரப்படும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.