1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்.. வரலாறு மற்றும் பின்னணி என்ன?

India Pakistan wars: பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூரை தொடங்கியது. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக்கொள்வது இது முதல் முறை அல்ல, 1947 இந்திய சுதந்திரம் பெற்றது முதல் பல முறை சண்டை வெடித்துள்ளது.

1947 முதல் 2025 வரை.. இந்தியா பாகிஸ்தான் இடையே நீடிக்கும் போர்.. வரலாறு மற்றும் பின்னணி என்ன?

கோப்பு புகைப்படம்

Updated On: 

09 May 2025 17:01 PM

இந்தியா பாகிஸ்தான் போர்: பஹல்காமில் ஏப்ரல் 22 2025 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான மோதல் தொடங்கியது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்திய ராணுவம் தரப்பில் பாகிஸ்தானில் ஒன்பது பயங்கரவாத தலைவர்கள் இருப்பிடம் குறி வைத்து தகர்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று இரவு அதாவது 8 மே 2025 அன்று பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் ஜம்மு காஷ்மீர் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாபில் இருக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் தரப்பில் ஏவப்பட்ட அனைத்து மிஸைல்கள் மற்றும் ட்ரோன்களை தடுத்து நிறுத்தியது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற வரும் மோதல்கள் உலக நாடுகள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதிக் கொள்வது இது முதல் முறை அல்ல இதற்கு முன்னர் பலமுறை இந்தியாவும் பாகிஸ்தானும் பல்வேறு காரணங்களுக்காக மோதலில் ஈடுபட்டுள்ளது.

1947 முதல் 1948 வரை நடைபெற்ற முதல் இந்தியா பாகிஸ்தான் போர்:

1947 அக்டோபர் 22 ஆம் தேதி அன்று முதல் முதலாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடைபெற்றது. இந்த போருக்கு பின்னால் இருந்த காரணம் என்னவென்று பார்த்தோம் என்றால் சுதந்திரத்திற்கு பிறகு அனைத்து சுதேச அரசர்களுக்கும் மூன்று தேர்வுகள் வழங்கப்பட்டன. ஒன்று இந்தியாவுடன் இணைவது, இரண்டாவது பாகிஸ்தானுடன் இணைவது, மூன்றாவது சுதந்திரமாக இருப்பது. இதில் ஜம்மு காஷ்மீரின் ஆட்சியாளரான ராஜா ஹரிசிங் சுதந்திரமாக இருக்க தேர்வு செய்தார். இருப்பினும் மிகுந்த அழுத்தத்தின் காரணமாக காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் இந்தியாவில் ஒரு பகுதியாக மாறியது. ஆனால் பாகிஸ்தான் அரசுக்கு இதில் உடன்பாடு இல்லாத காரணத்தால் காஷ்மீருக்கு துருப்புகளை அனுப்பியது. இது இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையே ஆன மோதலை வெளிப்படையாக தூண்டியது. இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நடந்து வரும் நிலையில் ஐநாவின் மத்தியஸ்த்துடன் கூடிய போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக காஷ்மீர் கட்டுப்பாடு கோடு பிரிக்கப்பட்டது..

1965 இந்தியா பாகிஸ்தான் போர்:

ஜம்மு காஷ்மீர் பிராந்தியம் தொடர்பான சர்ச்சைகள் காரணமாகவே இந்த போர் தொடங்கியது. இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த பகுதியை உரிமை கொண்டாடின. 1947 சுதந்திரம் பெற்றதில் இருந்து காஷ்மீரின் அந்தஸ்து தீர்க்கப்படாமல் உள்ளது பாகிஸ்தான் உள்ளூர் கிளர்ச்சியாளர்களை ஆதரித்தது. இந்த போர் சுமார் ஐந்து வாரங்கள் நீடித்தது. இரு தரப்பிலும் கடுமையான சண்டை நடந்தது. இறுதியில் இந்தியா, பாகிஸ்தான் படைகளை பின்னுக்கு தள்ளியது. இதனைத் தொடர்ந்து சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்காவால் போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது அதாவது தாஷ்கண்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.

1971 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் இந்தியா போர்:

1971 ஆம் ஆண்டு நடந்த போர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு பெரிய மோதலாக இருந்தது. இதன் விளைவாக வங்கதேசம் உருவாக்கப்பட்டது. கிழக்குப் பாகிஸ்தானில் அதாவது தற்போது வங்கதேசம் ஏற்பட்ட அரசியல் மற்றும் இன பதட்டங்கள் இந்த போருக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்தப் போரில் பாகிஸ்தான் ராணுவம் கடுமையாக சண்டையிட்டது. மேற்கு பகுதியில் நடந்த லோங்கேவாலா போர் ஒரு முக்கிய சண்டையாகும். இதில் இந்தியப் படைகள், பெரிய பாகிஸ்தான் ராணுவத்தை வெற்றிகரமாக முறையடித்தனர். வங்கதேச சுதந்திர பெற்றதன் மூலம் போர் முடிவுக்கு வந்தது. பல வருட மோதலுக்கு பிறகு கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தானில் இருந்து பிரிந்தது.

1999 ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போர்:

கார்கில் போர் என்பது இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1999 ஆம் ஆண்டு மே முதல் ஜூலை வரை ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியில் நடந்த ஒரு மோதலாகும். சர்ச்சைக்குரிய பகுதியில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக இந்த சண்டை நடந்தது பாகிஸ்தான் வீரர்கள் இந்தியா எல்லைக்குள் பதுங்கி சென்று முக்கியமான மலை நிலையங்களை கைப்பற்றினர். பாகிஸ்தான் போராளிகள் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள கார்கிலுக்குள் நுழைந்து கட்டுப்பாடு கோட்டில் உள்ள முக்கிய இடங்களை கைப்பற்றிய போது இந்த போரானது தொடங்கியது . இந்த போரின் போது முப்படைகளும் தீவிரமாக சண்டையிட்டது. கார்கில் போரை வெல்ல இந்திய ராணுவம் ஆபரேஷன் விஜய் தொடங்கியது. சர்வதேச சமூகம் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த உதவிய பின்னால் ஜூலை மாதம் இந்த போர் நிறுத்தப்பட்டது. போர் முடிவடைந்த போதிலும் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்கள் தொடர்ந்து வண்ணம் இருந்தது.

2016ல் நடந்த உரி சர்ஜிகள் ஸ்டிரைக்:

செப்டம்பர் 2016 ஜம்மு காஷ்மீர் உரிப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ தளத்தில் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்கிரமப்ப காஷ்மீரில் இந்திய ராணுவம் இந்த தாக்குதலை நடத்தியது. இந்த மோதலில் பல பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கான இந்தியாவின் அணுகு முறையில் இது ஒரு புதிய கட்டத்தை குறித்தது. .

2019 ஆம் ஆண்டு நடந்த புல்வாமா மற்றும் பால்கோட் தாக்குதல்:

2019 ஆம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு . பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் பால்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது முகாம் மீது இந்தியா வான்வழி தாக்குதலை நடத்தியது. 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற போருக்குப் பிறகு இது போன்ற முதல் வானொலி தாக்குதலாக இது அமைந்தது. பாகிஸ்தான் எல்லைக்குள் ஆழமாக பயங்கரவாத பயிற்சி வசதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வளர்ந்து வரும் பயங்கரவாதத்திற்கு ஒரு பதிலடியாக இருந்தது.

2025 ஆபரேஷன் சிந்தூர்:

பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது துல்லியமான ஏவுகணை தாக்குதலான ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இந்த நடவடிக்கை 25 நிமிடங்களுக்கு நடைபெற்றது. இதில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.