நடுகடலில் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல்.. 24 பேரின் கதி என்ன? கேரளா கடல் பகுதியில் சம்பவம்!

Cargo Ship Accident Near Kochi : கேரளா மாநிலம் கொச்சி அருகே நடுக்கடலில் சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானது. நடுக்கடலில் கட்டுப்பாட்டை இழந்த கப்பல், நிலைதடுமாறியது. இதனை அறிந்த இந்திய கடற்படை, சம்பவ இடத்திற்கு வந்து 21 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். மேலும், கப்பலில் இருந்த பணியாளர்கள் 3 பேரை தேடி வருகின்றனர்

நடுகடலில் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல்..  24 பேரின் கதி என்ன? கேரளா கடல் பகுதியில் சம்பவம்!

நடுக்கடலில் சரக்கு கப்பல் விபத்து

Updated On: 

25 May 2025 09:54 AM

கேரளா, மே 25 : கேரளா மாநிலம் கடல் பகுதிகளில் நடுக்கடலில் சரக்கு கப்பல் ஒன்று நிலைத்தடுமாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், கப்பலில் இருநது 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால், கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், கடலின் சீற்றமும் அதிகமாக உள்ளது. இந்த சூழலில், கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், நடுக்கடலில் பயணித்த சரக்கு கப்பல் ஒன்று நிலைத்தடுமாறி உள்ளது. லைபீரியா கொடியுடன் கூடிய MSC ELSA 3 என்ற சரக்கு கப்பல் கொச்சியில் இருந்து தென்மேற்கே சுமார் 38 கடல் மைல் தொலைவில் நிலைத் தடுமாறியது. 184 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல் 2025 மே 23 அன்று விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.

நடுகடலில் விபத்தில் சிக்கிய சரக்கு கப்பல்

இந்த கப்பல் 2025 மே 24ஆம் தேதி கொச்சி செல்ல இருந்தது. இந்த கப்பலில் 24 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, கொச்சி கடற்கரையில் இருந்து 38 கடல் மைல் தொலைவில் கப்பல் சென்றுக் கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், கப்பல் சரிந்து விழும் நிலைக்கு சென்றது. மேலும், கப்பல் மூழ்க தொடங்கியது. உடனே இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனவே சம்பவ இடத்திற்கு வந்த இந்திய கடற்பரை வீரர்கள் அதில் பயணித்த 21 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். கப்பலின் கேப்டன், தலைமை பொறியாளர் உள்ளிட்ட 3 பேரை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.

24 பேரின் கதி என்ன?


கப்பலில்  இருந்து மீட்கப்பட்ட 21 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும், 3 பேரை தேடும் பணிகள் நடந்து வருகிறது. கப்பலில் உள்ள பணியாளர்கள் மீட்கப்பட்டதை அடுத்து, கப்பல் கண்டெய்னரில் உள்ள பொருட்களை ஆபத்தானவை என இந்திய கடற்படை கூறியுள்ளது. இதனால், அங்கு மீட்பு பணிகள் நடந்து வருகிறது. கண்டெய்னலில் எண்ணெய் கொள்கலன்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இது மிகவும் ஆபத்தானது என இந்திய கடற்படை கூறியுள்ளது. இதனை அடுத்து, கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய அறிவுறுத்தலை பொதுமக்களுக்கு வழங்கியுள்ளது. அதாவது, மத்திய மற்றும் வடக்கு கேரளாவிற்கு இடையில் கரையோரத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் கொள்கலன்கள் கரை ஒதுங்கினால் மக்கள் தொட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கரை ஒதுக்கினால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டது. 112 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. எண்ணெய் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், கேரள மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியமும் எச்சரிக்கையாக உள்ளது.