நாடு முழுவதும் நீட் இளநிலை தேர்வு… 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு.. மாணவர்களுக்கு கட்டுப்பாடு!

Neet UG Exam 2025 : நாடு முழுவதும் 2025 மே 4ஆம் தேதியான இன்று நீட் இளநிலை தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதும் நிலையில், தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

நாடு முழுவதும் நீட் இளநிலை தேர்வு... 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு.. மாணவர்களுக்கு கட்டுப்பாடு!

நீட் தேர்வு

Published: 

04 May 2025 06:45 AM

டெல்லி, மே 4 : நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு (Neet ug exam) 2025 மே 4ஆம் தேதியான இன்று நடக்கிறது. இன்று மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, யுனானி, ஓமியோபதி உள்ளிட்ட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவில் நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நுழைவுத் தேர்வு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த நுழைவுத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நாடு முழுவதும் நீட் இளநிலை தேர்வு

அந்த வகையில், இன்று இளநிலை நீட் நுழைவு தேர்வு நடைபெற உளள்து. 2025-26ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு 2025 பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி 2025 மார்ச் 7ஆம் தேதி நிறைவு அடைந்தது. இந்த தேர்வுக்கு நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த நிலையில், 2025 மே 4ஆம் தேதியான இன்று நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. காகித முறையில் நடைபெறும் இந்த தேர்வை, 23 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும் நிலையில், 180 கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இயற்பியலில் 45 கேள்விகள், வேதியில் 45 கேள்விகள், உயிரியலில் 90 என மொத்ம் 180 கேள்விகள் இருக்கும். ஒவ்வொரு சரியான விடைக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கும்போது, ஒவ்வொரு தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் கழிக்கப்படுகிறது.

23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

இந்த தேர்வுக்கான முவுகள் 2025 ஜூன் 14ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டள்ளது. அதன்படி,  தேர்வு அறைக்கு மாணவர்களுக்கு மொபைல் போன்கள், புளூடூத், ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற மின்னணு சாதனங்களுக்கு அனுமதி கிடையாது. கைப்பைகள், பெல்ட்கள், தொப்பிகளுக்கு அணிந்து வர கூடாது.

உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களையும் எடுத்து வர கூடுது. ஆபரணங்கள், அலங்காரங்கள் அணியக் கூடாது. சல்வார் அல்லது பேண்ட் அணிய வேண்டும். முழுக்கை ஆடைகள், எம்பிராய்டரி கொண்ட ஆடைகளை அணியக் கூடாது. ஷூக்கள், ஐஹீல்ஸ் போடக்கூடாது. இருக்கமாக தலைமுடியை பின்னல் போடக்கூடாது என மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் விதிமீறல்கள் பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மூன்று ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related Stories
விடிந்தால் நீட் தேர்வு.. மாணவி எடுத்த விபரீத முடிவு.. அறையில் அதிர்ச்சி சம்பவம்!
எல்லையில் பரபரப்பு.. சிக்கிய பாகிஸ்தான் ராணுவ வீரர்.. கைது செய்த பிஎஸ்எஃப் வீரர்கள்!!
Viral Video : பைக்கில் எழுந்து நின்று ஆபத்தான முறையில் சாகசம்.. சாலையில் விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 – தேர்வில் 97% பெற்ற மாணவி – என்ன நடந்தது தெரியுமா?
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல் முறை! ஜம்மு காஷ்மீர் முதல்வரை சந்தித்த பிரதமர் மோடி.. பதட்டத்தில் பாகிஸ்தான்!
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா? முன்னாள் ராணுவ அதிகாரியின் வீடியோவால் சர்ச்சை