‘ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எப்போதுமே அப்படித்தான்’ – நடிகை திரிஷா சொன்ன விஷயம்!
Trisha Krishnan About Thalapathy Vijay : தமிழில் சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாகக் கதாநாயகியாகக் கலக்கி வருபவர் திரிஷா கிருஷ்ணன். இவர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் நடிகர் விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பதைப் பற்றிப் பேசியிருந்தார், அந்த விஷயம் குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

திரிஷா மற்றும் விஜய்
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் திரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan). இவர் சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினியாக சினிமாவில் நடித்து வருகின்றார். தமிழில் கடந்த 1999ம் ஆண்டு வெளியான ஜோடி (Jodi) படத்தில் முக்கிய ரோலில் நடித்து சினிமாவில் நுழைந்தார். அந்த படத்தைத் தொடர்ந்து மௌனம் பேசியதே (Mounam Pesiyadhe) என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார். இயக்குனர்அமீர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சூர்யா (Suriya) முன்னணி நடிகராக நடித்தார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து திரிஷா கதாநாயகியாக நடிக்கத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து தமிழில் மட்டுமில்லாமல், தெலுங்கு , மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் தமிழில் நடிகர்கள் விஜய் (Vijay), சூர்யா, அஜித், விக்ரம் மற்றும் பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார்.
மேலும் திரிஷா மற்றும் நடிகர் விஜய்யின் நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவர்கள் இருவரின் நடிப்பில் ஆதி, குருவி, கில்லி, திருப்பாச்சி மற்றும் லியோ போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகை திரிஷா கிருஷ்ணன் முன்னதாக பேசியிருந்த நேர்காணலில் விஜய்யைப் பற்றிப் பேசிய விஷயம் குறித்துப் பார்க்கலாம்.
நடிகை விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்போதுமே இப்படித்தான் :
அந்த நேர்காணலில் நடிகை திரிஷா கிருஷ்ணன், “சிம்பு எப்போதுமே என்னை ஹூட்டிங் ஸ்பாட்டில் எதாவது சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் விஜய் அப்படி கிடையாது. ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எப்போதுமே அமைதியாகவே இருப்பார். காட்சிகளில் நடிக்கும்போது மட்டும்தான் அவர் வாயையே திறப்பார் என்று கூறலாம். மற்ற நேரங்களில் ஒரு சுவரின் அருகில் உட்கார்ந்து அமைதியாக இருப்பார். அவர் அடுத்த காட்சிகளைப் பற்றி யோசிக்கலாம் ஆனால் யாரிடமும் பேசாமல் இருப்பார். அதை அவர் மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும். ஷூட்டிங் ஸ்பாட்டில் கலகலவென பேசினால் நன்றாக இருக்கும் என்று நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கூறியிருந்தார்.
நடிகை திரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டாகிராம் பதிவு :
திரிஷா கிருஷ்ணனின் புதிய படங்கள் :
நடிகை திரிஷா கிருஷ்ணன் குட் பேட் அக்லி படத்தைத் தொடர்ந்து, தக் லைஃப், சூர்யா 45, மற்றும் விஸ்வம்பரா போன்ற படங்களில் நடித்தது வந்தார். இதில் கமலின் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்தது. அதை தொடர்ந்து சூர்யா 45 படத்திலும், விஸ்வம்பரா படங்களிலும் நடித்து வருகிறார். இந்த படங்களும் இந்த 2025ம் ஆண்டிற்குள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.