Kenishaa Francis : ரவி மோகன் விவகாரம்.. அவதூறுகளுக்கு எதிராக பாடகி கெனிஷா நோட்டீஸ்!

Kenishaa Legal Statement : நடிகர் ரவி மோகனின், தோழியின் பிரபல பாடகிகளில் ஒருவராக இருந்து வருபவர் கெனிஷா பிரான்சிஸ். சமீப காலமாக கெனிஷா பிரான்சிசும் பல இடங்களில் சந்தித்துவரும் நிலையில், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்பட்டது. இதை தொடர்ந்து இணையத்தில் இவர் மீதான அவதூறான செய்தியைக் குறித்து, கெனிஷாவின் சட்ட குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Kenishaa Francis : ரவி மோகன் விவகாரம்.. அவதூறுகளுக்கு எதிராக  பாடகி கெனிஷா நோட்டீஸ்!

ரவி மோகன் மற்றும் கெனிஷா

Published: 

25 May 2025 17:37 PM

தென்னிந்திய சினிமா துறையில் சமீபகாலமாக நடிகர் ரவி மோகன்(Ravi Mohan), ஆர்த்தி ரவி  (Aarthi Ravi) மற்றும் கெனிஷா பிரான்சிஸ் (Kenishaa Francis) இவர்களின் பிரச்னை காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவை இவர்களின் விவாகரத்து (divorce) ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. இந்த வழக்கு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, நடிகர் ரவி மோகன் தனது தோழியையும், பாடகியுமான கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் தயாரிப்பாளர் மகள் திருமணத்தில் ஒரே நிற ஆடையில் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து இந்த விவாகரத்து விஷயமானது மிகவும் பேசப்பட்டு வந்தது. மேலும் இதைத் தொடர்ந்து ஆர்த்தி ரவி, ரவி மோகன் மற்றும் சுஜாதா விஜயகுமார் மாறிமாறி அறிக்கையை வெளியிட்டு வந்தனர். மேலும் இதைத் தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினர் கெனிஷா பிரான்சிஸை கேள்வி எழுப்பினர்.

விவாகரத்து பிரச்னைக்கு இவர்தான் காரணம் என, இவருக்குத் தொடர்ந்து அவதூறான செய்திகள் வருகின்றன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், கெனிஷா அறிக்கை ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் வெளியிட்டுள்ளார்.

பாடகி கெனிஷா பிரான்சிசின் இன்ஸ்டாகிராம் பதிவு :

இந்த பதிவில், அவர் ” என்னைப் பற்றிய உங்கள் அனுமானங்கள் உங்களை காயப்படுத்துகின்றன என்பதற்கு நான் வருந்துகிறேன். அதற்காக நீங்கள் என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன். விரைவில் ஒருநாள் வெளியாகும் உண்மையை நீங்கள் காண்பீர்கள், அந்த நாளில், நீங்கள் சொல்வதற்காக நான் உங்களைத் தடுக்க மாட்டேன் என்று நான் உறுதியளிக்கிறேன்.

நான் உண்மையிலே தவறு செய்தால் தண்டனை கிடைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் அந்த நாள் வரை, வெறுப்பு இல்லாமல் ஒரு கணம் என்னைச் சுவாசிக்க அனுமதிக்க முடியுமா என்று கூறியுள்ளார்.

ரவி மோகன் – ஆர்த்தி ரவி விவாகரத்து விவகாரம் :

தனது மனைவி ஆர்த்தி ரவியை விவாகரத்து செய்யவிருப்பதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த விவாகரத்து பிரச்னையானது பூகம்பமாக வெடித்தது. மேலும் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி ரவி மற்றும் அவரின் தாயார் தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரை என மாறி மாறி சமூக ஊடகங்களில் அறிக்கையை வெளியிட்டு வந்தனர். மேலும் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் விவாகரத்து வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், கடந்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகினார்கள்.

அதைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் விவாகரத்து மற்றும் தனிப்பட்ட விஷயங்கள் தொடர்பாக அறிக்கையை ஊடகத்தில் வெளியிடக் கூடாது என உயர்நீதிமன்றம் அறிவித்திருந்தது. மேலும் இவர்களின் அடுத்த வழக்கு வரும் 2025, ஜூன் 12ம் தேதியில் நடைபெறவுள்ளது. அதி தொடர்ந்து இவர்களின் விவாகரத்து வழக்கு முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories
Tourist Family : தொட்டதெல்லாம் தூள்பறக்குது மம்பட்டியான்.. குஷியில் நடனமாடிய ‘டூரிஸ்ட் பேமிலி’ படக்குழு..!
Thug Life : சிம்புவின் டைட்டில் கார்டு வீடியோவை வெளியிட்ட ‘தக் லைஃப்’ படக்குழு.. ரசிகர்கள் மத்தியில் வைரல்!
Maargan : விஜய் ஆண்டனியின் ‘மார்கன்’ ட்ரெய்லர் ரிலீஸ் எப்போது.. படக்குழு வெளியிட்ட அப்டேட்!
Rajinikanth : ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ‘கேங்ஸ்டர்’ கதையில் நடிக்கிறாரா ரஜினிகாந்த்?
Shivarajkumar : நான் கமல் சாரின் பெரிய ரசிகன்.. அவரை கட்டிபிடித்துவிட்டு 3 நாள் குளிக்கவில்லை – நடிகர் சிவராஜ் குமார் பேச்சு!
Silambarasan : கமல் சார் கழுத்தை பிடிச்சிட்டேன்.. அந்த காட்சியில் நடிக்கக் கஷ்டப்பட்டேன்.. சிலம்பரசன்!