மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

Theatre Release Movies: கோலிவுட் சினிமாவில் வெள்ளிக்கிழமை வந்தாலே திருவிழாவாகதான் இருக்கும். அப்படி ஒவ்வொரு வாரமும் புது புது படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் கடந்த வாரம் கோலிவுட் சினிமாவில் ரெட்ரோ மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படம் வெளியானது போல இந்த வாரமும் படங்கள் வரிசைக் கட்டி காத்திருக்கின்றது.

மே 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் என்னென்ன தெரியுமா?

படங்கள்

Published: 

06 May 2025 21:27 PM

நிழற்குடை: நடிகை தேவயானி நடிப்பில் உருவாகியுள்ள படம் நிழற்குடை. இந்தப் படத்தை இயக்குநர் சிவா ஆறுமுகம் எழுதி இயக்கியுள்ளார். இவர் நடிகை தேவயானியை தமிழில் அறிமுகப்படுத்திய இயக்குநர் அதியமானிடம் உதவி இயக்குநராக இருந்தது குறிப்பிடத்தக்கது. தேவயானி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தில் நடிகர் விஜித் நாயகனாகவும் நடிகை கண்மணி நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் இளவரசு, வடிவுக்கரசி, நீலிமா, ராஜ்கபூர், மனோஜ்குமார், இசை, நிஹாரிகா, அஹானா என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் தர்ஷன் சிவா என்ற அறிமுக நடிகர் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு வெளியிட்டது. அதில் நாயகன் நாயகி இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை பார்த்துக்கொள்ள கேர் டேக்கராக நடிகை தேவயானியை வேலைக்கு வைக்கிறார்கள்.

எதிர்பாராத விதமாக குழந்தை காணாமல் போய்விடுகிறது. குழந்தையை கேர் டேக்கராக இருந்த தேவயானிதான் கடத்திவிட்டதாக போலீஸ் சந்தேக்கிறது. இதனை தொடர்ந்து என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை. இந்தப் படம் வருகின்ற மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிழற்குடை படத்தின் ட்ரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி:

கஜானா: இயக்குநர் பிரபதிஷ் சாம்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கஜானா. இந்தப் படத்தில் நடிகர் வேதிகா, இனிகோ, யோகிபாபு, சாந்தினி, ஹரீஷ் பேரடி, பிரதாப் போத்தன், கராத்தே கார்த்தி, இளங்கோ, சேந்திரன், விஜயலட்சுமி, வீரமணி, கத்தி நரேன், வேலு பிரபாகரன், பூஜா சங்கர் ராஜேஷ், சஹானா, வெங்கடராமன், தேவா, நித்தியா என பலர் நடித்துள்ளனர். படம் வருகின்ற மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

எமன் கட்டளை: இயக்குநர் எஸ்.ராஜசேகர் இயக்கத்தில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு கதாநாயகனாக நடித்திருக்கும் படம் எமன் கட்டளை. செல்லம்மாள் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை சந்திரிகா நடித்தித்துள்ளார். இவருகளுடன் இணைந்து நடிகர்கள் அர்ஜுனன், நளினி, சார்லி, பவர்ஸ்டார், அனு மோகன், ஆர்.சுந்தர்ராஜன், சங்கிலி முருகன், வையாபுரி, மதன்பாபு, கராத்தே ராஜா என பலர் நடித்துள்ளனர். படம் வருகின்ற மே மாதம் 9-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.