Trisha Krishnan : திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் இதுதான்.. நடிகை த்ரிஷா கூறிய உண்மை!

Trisha Krishnan About Marriage : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திரிஷா கிருஷ்ணன். இவர் சுமார் 22 ஆண்டுகளுக்கும் மேலாகக் கதாநாயகியாகப் படங்களில் நடித்து வருகிறார். மேலும் இவரின் திருமணத்தைக் குறித்தும் சமீபகாலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவர் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் ஒருவருடன் திருமண செய்யவிருந்த நிலையில், அது நின்றதற்குக் காரணம் பற்றிக் கூறியிருக்கிறார்.

Trisha Krishnan :  திருமணம் நின்றுபோனதற்குக் காரணம் இதுதான்.. நடிகை த்ரிஷா கூறிய உண்மை!

த்ரிஷா கிருஷ்ணன்

Published: 

06 May 2025 22:09 PM

நடிகை த்ரிஷா கிருஷ்ணனின் (Trisha Krishnan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ulgy). இந்த படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகை திரிஷா கிருஷ்ணன் நடிகர் அஜித் குமாருக்கு (Ajith Kumar) ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு முன் வெளியான விடாமுயற்சி (Vidaamuyarchi) படத்திலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா கிருஷ்ணன் தெலுங்கு , மலையாளம் போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும் இந்த 2025ம் ஆண்டில் மட்டும் நடிகை த்ரிஷாவின் நடிப்பில் மட்டும் சுமார் 3 படங்கள் வெளியாகியிருக்கிறது. 2025ம் ஆண்டு 5 மாதங்களில் மட்டும் 3 படங்கள் ரிலீஸாகியிருக்கிறது. நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் பெரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டிலே நடிகை திரிஷாவுக்கு, பிரபல தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. இந்த நிச்சயத்தர்தம் தொடர்பான போட்டோஸ் கூட இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகை திரிஷா அந்த திருமண நடைபெறாததற்குக் காரணத்தைப் பற்றிக் கூறியுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை த்ரிஷா, நிச்சயதார்த்தம் செய்த நபர் திருமணத்திற்குப் பின் படங்களில் நடிக்கக்கூடாது என்று கூறினார். அதன் காரணமாகத்தான் திருமணத்தை நிறுத்தினேன் என்று கூறியிருக்கிறார், அவர் கூறியதை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

நடிகை திரிஷா கிருஷ்ணனின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகை திரிஷா கிருஷ்ணன் கூறிய விஷயம் :

நேர்காணல் ஒன்றில் பேசிய த்ரிஷா கிருஷ்ணன் “எனது திருமணத்தை நிறுத்திவிட்டேன், அதற்கான காரணம் என்னவென்றால் அவர், நான் திருமணத்திற்குப் பின் படங்களில் நடிக்கக் கூடாது என்று கூறினார். அதற்காக நான் நடிப்பை நிறுத்துவதற்குப் பதிலாகத் திருமணத்தை நிறுத்திவிட்டேன். என்னை பொறுத்தவரை திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பேன். ஒரு வேளை கர்ப்பமானாள் மட்டும் வேண்டுமானால் படங்களில் இருந்து பிரேக் எடுப்பேன். அதுவும் குழந்தை பிறக்கும் வரையில்தான். பின் மீண்டும் படங்களில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கூறியுள்ளார்.

நடிகை திரிஷா கிருஷ்ணனின் புதிய படங்கள் :

நடிகை திரிஷா தமிழில் சூர்யா45 படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் விஸ்வம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகை திரிஷா கிருஷ்ணனின் நடிப்பில் மட்டும் இன்னும் தக் லைப், சூர்யா45, விஸ்வம்பரா மற்றும் மலையாளத்தில் ஒரு படம் வீதம் 4 படங்கள் உருவாகிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.