Entertainment Highlights: மீண்டும் இணையும் விஜய்சேதுபதி – பாண்டிராஜ் கூட்டணி!

Entertainment News in Tamil, 31 July 2025, Live Updates: தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் தலைவன் தலைவி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கிய நிலையில் மீண்டும் இக்கூட்டணி இணையவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Entertainment Highlights: மீண்டும் இணையும் விஜய்சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணி!

சினிமா செய்திகள்

Updated On: 

31 Jul 2025 20:04 PM

விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda) நடித்துள்ள, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கிங்டம் (kingdom Movie Review) திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. தமிழில் சூர்யா டப்பிங் கொடுத்து இப்படம் வெளியாகிறது. வெளியீட்டிற்கு முன்பே டீசர் மற்றும் டிரெய்லர் மூலம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் படம், ஜூலை 31, 2025 இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது. இந்தப்படம் குறித்த அப்டேட்களையும் ரிவியூக்களையும் பார்க்கலாம். கோலிவுட்டை பொறுத்தவரை நாளை சிறுபட்ஜெட் படங்கள் 3 வெளியாகவுள்ளன. ஜிவி பிரகாஷின்( GV Prakash) பிளாக்மெயில் உள்ளிட்ட 3 படங்கள் லிஸ்டில் உள்ளன. அப்படங்கள் ரிலீஸ் தொடர்பான சில சினிமா அப்டேட்களை இங்கு பார்க்கலாம். இது போக பணமோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அப்டேட்களையும் மற்ற சினிமா செய்திகள் மற்றும் அப்டேட்களையும் இங்கு உடனுக்குடன் பார்க்கலாம்

மேலும் சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள க்ளிக் செய்க

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 31 Jul 2025 07:40 PM (IST)

    சர்தார் 2 ஷூட்டிங் ஓவர்.. படக்குழுவினருக்கு விருந்து வைத்த கார்த்தி!

    2022ம் ஆண்டு பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் சர்தார். இந்த படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் ஹீரோயினாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் படக்குழுவினருக்கு நடிகர் கார்த்தி விருந்தளித்துள்ளார்.

  • 31 Jul 2025 07:20 PM (IST)

    Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குவது இவர்களா?

    மதராஸி, பராசக்தி என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இரட்டை இயக்குநர்களான புஷ்கர் காயத்ரி இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே விக்ரம் வேதா படம் மூலம் முன்னணி இயக்குநர்களாக மாறினர். விலங்கு வெப் தொடரையும் இயக்கியிருந்தனர்.

  • 31 Jul 2025 07:00 PM (IST)

    ரிலீஸ் தேதியை மாற்றும் தி ராஜா சாப் படக்குழு.. டென்ஷனாகும் ரசிகர்கள்!

    தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் தி ராஜா சாப். இந்த படம் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிவைக்கப்பட்டு கடைசியாக டிசம்பர் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் படத்தை 2026 பொங்கல் வெளியீடாக கொண்ட வர திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

  • 31 Jul 2025 06:40 PM (IST)

    நேரத்தை மாற்றிய மதராஸி படக்குழு.. அப்செட் ஆன ரசிகர்கள்!

    ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் மதராஸி. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் இருந்து முதல் பாடலாக இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பாடிய சலம்பல பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் இரவு வெளியாகும் என சொல்லப்பட்டுள்ளது.

  • 31 Jul 2025 06:20 PM (IST)

    Pooja Hegde: காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பூஜா ஹெக்டே!

    விறுவிறுப்பாக உருவாகும் காஞ்சனா 4 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை டூரிஸ்ட் பேமிலி படத்தில் நடித்த சிறுவன் கமலேஷ் வெளியிட்டுள்ளார். அதில் நடிகை பூஜா ஹெக்டேவுடன் கமலேஷ் இருக்கிறான். இதன்மூலம் ராகவா லாரன்ஸ் இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியாகியுள்ளது.

  • 31 Jul 2025 06:00 PM (IST)

    சிக்கந்தர் படம் தோல்வி.. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன காரணம்

    சல்மான்கானை வைத்து தான் இயக்கிய சிக்கந்தர் படம் தோல்வியடைந்ததற்கான காரணம் பற்றி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார். தாய்மொழியில் படம் பண்ணும்போது சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை யூகிக்க முடியும். ஆனால் வேற்று மொழியில் படம் செய்யும்போது ரசிகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரியாது” என கூறியுள்ளார்.

  • 31 Jul 2025 05:40 PM (IST)

    5 நாட்களில் ரூ.30 கோடி.. சாதனைப் படைத்த மகாவதார் நரசிம்மா படம்

    கடந்த ஜூலை 25ம் தேதி கன்னடத்தில் வெளியான மகாவதார் நரசிம்மா என்ற அனிமேஷன் படம் வெளியானது. அஸ்வின் குமார் இயக்கிய இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இப்படம் 5 மொழிகளில் வெளியான நிலையில் 5 நாட்களில் ரூ.30 கோடி வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

  • 31 Jul 2025 05:20 PM (IST)

    உதவி இயக்குநரிடம் கதை கேட்ட விஜய்.. ஆனால் நடந்தது வேறு

    ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் விஜய் பாபு இயக்கியுள்ள படம் சட்டென்று மாறுது வானிலை. இவர் உதவி உயக்குநராக வேலை பார்த்தபோது சர்கார் பட ஷூட்டிங்கின்போது விஜய் கதை கேட்டதாகவும், முதல் படம் முடித்து விட்டு வா பார்க்கலாம் என நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார்.

  • 31 Jul 2025 05:01 PM (IST)

    தலைவன் தலைவி வெற்றி.. மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ்

    தலைவன் தலைவி படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி, இயக்குநர் பாண்டிராஜ் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • 31 Jul 2025 04:40 PM (IST)

    தவெக கட்சியை சுட்டிக்காட்டும் வகையில் காட்சிகளா? – படக்குழு மறுப்பு!

    பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் நடிகர் உதயா நடித்துள்ள படம் அக்யூஸ்ட். இந்த படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகிறது. அக்யூஸ்ட் படத்தில் நடிகர் விஜய்யின் தவெக கட்சியை சுட்டிக்காட்டும் வகையில் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் இதனைப் படக்குழு மறுத்துள்ளது. படம் பார்த்தால் உண்மை புரியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

  • 31 Jul 2025 04:20 PM (IST)

    என்ன பிரச்னையில் இருந்தாலும் துல்கர் முதல் ஆளாக வருவார்: கல்யாணி பிரியதர்ஷன்!

    திரையுலகிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எனக்கு துல்கர் சல்மான் பக்க பலமாக இருப்பவர் என நடிகை கல்யாணி பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக நான் என்ன பிரச்னையில் இருந்தாலும் அவர் தான் முதலில் எனக்காக வந்து நிற்பார் எனவும் புகழ்ந்துள்ளார்.

  • 31 Jul 2025 04:00 PM (IST)

    போகி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை புறக்கணித்த சுவாசிகா

    லப்பர் பந்து, மாமன் படம் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகை சுவாசிகா நடிப்பில் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகவுள்ள படம் போகி. இந்த படம் அவர் பல ஆண்டுகளுக்கு முன் நடித்ததாக சொல்லப்படுகிறது. தற்போதைய மார்க்கெட் வேல்யூ காரணமாக அவர் போகி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளவில்லை.

  • 31 Jul 2025 03:40 PM (IST)

    மான் வேட்டையாடிய வழக்கு.. செப்டம்பர் 22ம் தேதி மீண்டும் விசாரணை

    1998ம் ஆண்டு நடைபெற்ற பாலிவுட் பட ஷூட்டிங்கின்போது மான் வேட்டையாடியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கு மீண்டும் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 22ம் தேதி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • 31 Jul 2025 03:20 PM (IST)

    மறைந்த நடிகர் ஜெய்சங்கர் பெயரில் சென்னையில் சாலை

    சென்னையில் மறைந்த நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த கல்லூரி சாலையை ‘ஜெய்சங்கர் சாலை’ என பெயர் மாற்ற சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அவரது மகன் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்த நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  • 31 Jul 2025 03:00 PM (IST)

    ஆகஸ்ட் 1ம் தேதி தியேட்டரில் வெளியாகும் 9 படங்கள்!

    தமிழ் சினிமாவில் நாளை (ஆகஸ்ட் 1) அன்று சரண்டர், சென்னை ஃபைல்ஸ் முதல் பக்கம், மிஸ்டர் ஜூ கீப்பர், அக்யூஸ்ட், போகி, உசுரே உள்ளிட்ட 9 படங்கள் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் ஜிவி பிரகாஷின் பிளாக்மெயில் படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

  • 31 Jul 2025 02:40 PM (IST)

    டெங்கு காய்ச்சல் பாதிப்பால் நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி

    பிரபல நடிகை ராதிகா டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் 5 நாட்கள் கழித்து வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் ராதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 31 Jul 2025 02:20 PM (IST)

    சானியா மிர்ஸா வாழ்க்கை வரலாற்று படம்.. ஹீரோயின் யார்?

    ஓய்வுப் பெற்ற பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா வாழ்க்கை வரலாற்று படத்தில் யார் ஹீரோயினாக நடிக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தீபிகா படுகோனே, ப்ரணிதி சோப்ரா ஆகியோரை சானியா மிர்சா பரிந்துரைத்த நிலையில், அக்‌ஷய் குமாரும் நடித்தால் நன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

  • 31 Jul 2025 02:00 PM (IST)

    கதைக்கு தேவைப்பட்டால் முத்தக்காட்சியில் நடிப்பேன் – நடிகை தேஜூ அஸ்வினி

    என்ன சொல்லப் போகிறாய் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக எண்ட்ரீ கொடுத்த தேஜூ அஸ்வினி, தற்போது ஜிவி பிரகாஷ்குமார் ஜோடியாக பிளாக்மெயில் படத்தில் நடித்துள்ளார். இதனிடையே கதைக்கு தேவைப்பட்டால் முத்தக்காட்சியில் நடிக்க ரெடி என அவர் தெரிவித்துள்ளார்.

  • 31 Jul 2025 01:45 PM (IST)

    பெற்றோர்கள் கண்டிப்பு.. காதலிக்க முடியாமல் போனதாக தேஜூ அஸ்வினி வருத்தம்

    தன்னுடைய சகோதரி காதலித்த சம்பவத்தால் பெற்றோர்கள் என்னை கண்டிப்புடன் வளர்த்ததாக நடிகை தேஜூ அஸ்வினி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். இதனால் தனக்கு காலேஜில் சீனியர்கள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தாலும், காதலிக்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

  • 31 Jul 2025 01:25 PM (IST)

    Kingdom Movie: ரசிகர்களை மிகவும் கவர்ந்த கிங்டம் படம்!

    விஜய் தின்னனூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் கதை ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. மேலும் படத்தை தியேட்டரில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.

  • 31 Jul 2025 01:05 PM (IST)

    காந்தா படத்தின் டீசர் வரவேற்பு.. ரசிகர்களின் அன்புக்கு நன்றி..

    ரசிகர்களின் அன்பு மற்றும் பாசிட்டிவான ஆதரவுக்கு நன்றி என காந்தா படத்தின் டீசர் வரவேற்புக்கு நடிகர் துல்கர் சல்மான தெரிவித்துள்ளார். செப்டம்பர் 12 ஆம் தேதி திரையரங்குகளில் காந்தா படம் வெளியாகவுள்ளது.

  • 31 Jul 2025 12:45 PM (IST)

    பூஜையுடன் தொடங்கும் அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக நடிக்கும் படம்!

    டூரிஸ்ட் பேமிலி படத்தின் மூலம் இயக்குநராகவும், நடிகராகவும் அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் அடுத்ததாக ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதில் ஹீரோயினாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை ஆகஸ்ட் 3ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

  • 31 Jul 2025 12:25 PM (IST)

    பிளாக் மெயில் படம் ரிலீஸ் இல்லை.. ஏமாற்றத்தில் ஜிவி பிரகாஷ்குமார்

    மு.மாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், தேஜூ அஸ்வினி, பிந்து மாதவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் பிளாக் மெயில். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இந்த படம் 2025, ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 31 Jul 2025 12:05 PM (IST)

    ரஜினி வீட்டில் வழுக்கி விழுந்ததாக பரவும் வீடியோ.. உண்மை நிலை என்ன?

    தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக திகழும் நடிகர் ரஜினிகாந்த், சமீபத்தில் தனது வீட்டில் வழுக்கி விழுந்ததாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வீட்டில் மிகவும் எளிமையான மனிதராக வலம் வரும் ரஜினியின் தோற்றம் போன்று அந்த வீடியோவில் இருப்பதால் ரசிகர்களிடையே குழப்பம் நிலவியது. ஆனால் அந்த வீடியோவில் இருப்பது ரஜினி அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 31 Jul 2025 11:45 AM (IST)

    நாகார்ஜூனாவை அடிக்க 16 டேக்.. இஷா கோபிகர் பகிர்ந்த தகவல்!

    தமிழில் 2000ம் காலக்கட்டத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் இஷா கோபிகர். இவர் நாகார்ஜூனாவுடன் சந்திரலேகா என்ற படத்தில் நடித்தார். அதில் ஒரு கோபமாக இருக்கும் காட்சியில் நடிகர் நாகார்ஜூனாவை கன்னத்தில் அறைய சுமார் 16 டேக் எடுத்ததாக நினைவுக் கூர்ந்துள்ளார்,

  • 31 Jul 2025 11:25 AM (IST)

    பிரபல மலையாள பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்

    பிரபல மலையாள பாடகர் வேடன் மீது பாலியல் வன்கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொச்சியில் உள்ள திருக்காக்கரா காவல் நிலையத்தில் இளம்பெண் ஒருவர் வேடன் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்ததன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • 31 Jul 2025 11:05 AM (IST)

    சினிமாவில் உழைப்புக்கேற்ப சம்பளம் கிடைக்கவில்லை.. ஆர்.கே.செல்வமணி வேதனை

    சினிமாவில் வெற்றிக்கேற்ப சம்பளம் தான் கிடைக்கிறது. உழைப்புக்கேற்ப சம்பளம் கிடைக்கவில்லை என இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிக்க முயற்சி எடுத்து வருகிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

  • 31 Jul 2025 10:45 AM (IST)

    அன்று தயாரிப்பாளர்.. இன்று இயக்குநர்.. சிவகார்த்திகேயன் வாழ்வில் சுவாரஸ்யம்!

    நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக மதராஸி படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் வெளியான மான் கராத்தே படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 31 Jul 2025 10:25 AM (IST)

    லார்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிய பிரபல பாலிவுட் நடிகர்

    லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஹாகித் கபூர் கிரிக்கெட் விளையாடி அசத்தியுள்ளார். தொண்டு நிறுவனம் ஒன்றின் நிதி திரட்டலுக்காக அவர் இதனை செய்துள்ளார். இதுதொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  • 31 Jul 2025 10:05 AM (IST)

    கடினமான காலகட்டம் – பாண்டிராஜ் வேதனை

    எதற்கும் துணிந்தவன் படம் வெளியான பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக இயக்குநர் பாண்டிராஜ் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. அந்த 3 வருடங்கள் தன் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்தது. பண ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பிரச்னையில் இருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்

    Read More

  • 31 Jul 2025 09:41 AM (IST)

    இயக்குநர் பாண்டிராஜ் சொன்ன விஷயம்

    ஃபேமிலி செண்டிமெண்ட் படங்கள் குறித்து பேசிய பாண்டிராஜ், விக்ரம், ஜெயிலர் மற்றும் லியோ போன்ற படங்கள் வெற்றி பெற்றபோது, இனி ஃபேமிலி செண்டிமெண்ட் சினிமாவில் வேலை செய்யாது என்பதால் நான் சினிமாவை விட்டு வெளியேறலாம் என்று பலர் என் காதுபடவே சொன்னார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • 31 Jul 2025 09:20 AM (IST)

    சிவாவை புகழ்ந்த முருகதாஸ்

    சிவகார்த்திகேயன், 6 இல்லனா 7 படம் தான் நடித்திருப்பார். அவர் இப்போது தமிழ் சினிமாவில் எந்தவிதமான பின்னணியும் இல்லாமல் வரும் பல நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்.  அவரது கடின உழைப்புதான் காரணம் என்று முருகதாஸ் புகழ்ந்துள்ளார்.

  • 31 Jul 2025 08:51 AM (IST)

    Thalaivan Thalaivii OTT Release : தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ்

    தலைவன் தலைவி படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது இருக்கும் என்ற தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.  வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாம் வாரத்தில் ஓடிடியில் வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

    Read More

  • 31 Jul 2025 08:26 AM (IST)

    கிங்டம் படத்தின் வெற்றி கூட்டணி

    முன்னதாக, கௌதம் தின்னனுரி இயக்கிய ஜெர்சி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில்,  விஜய் தேவரகொண்டா உடனான கிங்டம் படம் மீது எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் இந்த கூட்டணியில் இது ஒரு சிறந்த திரைப்படம் வெளியாகியுள்ளது.

    Read More

  • 31 Jul 2025 08:10 AM (IST)

    Anirudh Music : அனிருத் இசை செம – கிங்டம் விமர்சனம்

    படத்தில் வரும் சிறைச்சாலை காட்சிகளும் படகு காட்சிகளும் படத்தின் சிறப்பம்சங்கள் என்றும், இரண்டாம் பாதி சூப்பர் ஸ்ட்ராங் என்று ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளன. வழக்கம் போல், அனிருத்தின் பின்னணி இசை அற்புதமாக இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளனர்

  • 31 Jul 2025 07:58 AM (IST)

    பிரமிக்க வைக்கும் கதை – கிங்டம் படத்துக்கு ரசிகர் பாராட்டு

    இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சினிமா ரசிகர்  ஒருவர், படம் முழுவதும் பிரமிக்க வைக்கிறது. சில நிமிடங்களில் பார்வையாளர்கள் கதையில் மூழ்கிவிடுவார்கள்.    விஜய் தேவரகொண்டா அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகியுடனான   காதல் காட்சிகள் ரசிக்கும் விதமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

    ரிவியூ

  • 31 Jul 2025 07:55 AM (IST)

    Kingdom Movie Review : கிங்டம் படம் ரிவியூ

    விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் படம் இன்று வெளியான நிலையில் பாசிட்டிவான ரிவியூ கிடைத்துள்ளது. படத்தை பார்த்த பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றன. திரைக்கதை, நடிப்பு என படம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது