கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கருடன் பணியாற்றியது மோசமாக இருந்தது – பிரபலம் கொடுத்த ஷாக் தகவல்!

Game Changer Movie 7.5 Hours Cut To 3 : கோலிவுட் சினிமாவில் பிரம்மாண்ட பட்ஜெட் பட இயக்குநர் என்றாலே நமக்கு நினைவிற்கு வருபவர் சங்கர். இவர் தெலுங்கில் இயக்குநராக அறிமுகமான படம் கேம் சேஞ்சர். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் அமைந்திருந்தது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய எடிட்டர் ஷமீர் படத்தின் மொத்த டைமிங் குறித்தது ஷாக் பதில் கொடுத்துள்ளார்.

கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கருடன் பணியாற்றியது மோசமாக இருந்தது  - பிரபலம் கொடுத்த ஷாக் தகவல்!

கேம் சேஞ்சர்

Updated On: 

02 Jul 2025 12:18 PM

நடிகர் ராம் சரணின் முன்னணி நடிப்பில் இறுதியாக மிகப் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் கேம் சேஞ்சர்  இந்த படத்தை இயக்குநர் எஸ். ஷங்கர் இயக்கியிருந்தார். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநராக பணியாற்றி வருபவர் ஷங்கர். இவரின் தெலுங்கு  திரையுலகில் முதல் படமாக அமைந்ததுதான் கேம் சேஞ்சர். இந்த படத்தின் மூல கதையை இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் கொடுத்துள்ளார். பின் அந்த கதையை இயக்குநர் ஷங்கர் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிப் படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் நடிகர் ராம் சரண் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அப்பா மற்றும் மகன் போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் அவருக்கு ஜோடியாக நடிகை கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உலகமெங்கும் வெளியானது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் வெளியாகியது. இந்த படமானது மொத்தமாக சுமார் 3 மணிநேர படமாக அமைந்திருந்தது. ஆனால் இந்த படமானது மொத்தம் சுமார் 7.5 மணிநேரமாக இருந்ததாகவும், அதை 3 மணிநேரமாக மிகவும் சிரமப்பட்டுக் கொண்டுவந்ததாகவும் , கேம் சேஞ்சர் பட எடிட்டர் ஷமீர் கூறியுள்ளார்.  அந்த தகவலானது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

கேம் சேஞ்சர் எடிட்டர் ஷமீர் ஷமீர் கூறிய விஷயம் :

சமீபத்தில் நேர்காணல் ஒன்றி பேசிய, கேம் சேஞ்சர் பட எடிட்டர் ஷமீர். அதில் “சங்கர் சாருடன் வேலை செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்த கேம் சேஞ்சர் படத்தினை எடிட் செய்யும்போது நிறையச் சவாலான விஷயங்கள் இருந்தது. இந்த படத்தின் நீளம் சுமார் 7.5 மணி நேரமாகும். அவ்வளவு பெரிய படத்தை மிகவும் கஷ்டப்பட்டுத்தான் 3 மணி நேரமாகக் குறைத்தோம்.

சுமார் 7.5 மணிநேரம் இருந்த இந்தப் படத்தை சுமார் 4.5 மணிநேரத்தை வெட்டி, மொத்தமாக 3 மணிநேரமாகக் கொண்டுவந்தோம். இந்த படத்தில் எடிட்டராக பணியாற்றிய விஷயமானது மிகவும் மோசமாகத்தான் இருந்தது என்று பிரபல எடிட்டர் ஷ்மீர் கூறியுள்ளார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

எடிட்டர் ஷமீர் பேசிய வீடியோ :

ராம் சரணின் இந்த கேம் சேஞ்சர் திரைப்படமானது சுமார் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்களுக்கு மட்டும் ரூ. 75 கோடிகள் செலவானதாக ஷங்கர் தெரிவித்திருந்தார். இவ்வாறு பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த படமானது. சுமார் ரூ. 180 கோடிகளுக்கு மேல் மட்டும்தான் வசூல் செய்திருந்தது. இதன் காரணமாக ராம் சரணின் நடிப்பில் வெளியான இந்தப் படம் தோல்வியைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories
காமெடி படத்தில் இத்தனை ட்விஸ்டா? அமேசான் ப்ரைம் வீடியோவில் இருக்கும் இந்த மதுர மனோகர மோஹம் படத்தை கண்டிப்பா பாருங்க!
ஜோதிகா மற்றும் கார்த்தி இல்லாமல் சூர்யா இன்ஸ்டாவில் ஃபாலோ பண்ணும் அந்த ஒரே ஒரு தமிழ் நடிகர்… யார் தெரியுமா?
பிளாக் மெயில் முதல் சரண்டர் வரை… இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
இனி ஃபேமிலி செண்டிமெண்ட்லாம் ஹிட்டடிக்கதுனு நீ சினிமாவை விட்டு போ சொன்னாங்க – இயக்குநர் பாண்டிராஜ் பேச்சு!
பண மோசடி வழக்கில் பிரபல காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
தூக்கமில்லாமல் கஷ்டப்பட்டேன்…. ‘கிங்டம்’ பட நிகழ்வில் விஜய் தேவரகொண்டா உருக்கம்!