Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : ”வாழ்க்கையில் நான் அதிகம் பயந்த படம் இதுதான்”.. இயக்குநர் சுந்தர் சி ஓபன் டாக்!

Sundar C About Aranmanai 2 : இயக்குநர் சுந்தர் சி-யின் திரைப்படங்கள் என்றாலே காமெடி, த்ரில்லர் மற்றும் மாறுபட்ட கதைக்களத்துடன் இருக்கும். அப்படி இவரின் இயக்கத்தில் இதுவரை பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து சுந்தர் சி, தனது வாழ்க்கையிலே அரண்மனை 2 படத்தின் ரிலீஸின் போதுதான் மிகவும் பயந்தேன் என்று கூறியுள்ளார்.

Cinema Rewind : ”வாழ்க்கையில் நான் அதிகம் பயந்த படம் இதுதான்”..  இயக்குநர் சுந்தர் சி ஓபன் டாக்!
சுந்தர் சி
Barath Murugan
Barath Murugan | Published: 07 Apr 2025 20:25 PM

இயக்குநர் சுந்தர் சி-யின் (Director Sundar C)  இயக்கத்தில் இறுதியாக வெளியான படங்கள் மத கஜ ராஜா (Madha Gaja Raja ) மற்றும் அரண்மனை 4 (Aranmanai 4) . இந்த இரு திரைப்படங்களும் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியது. இப்படத்தைத் தொடர்ந்து, இவரின் இயக்கத்திலும், நடிப்பிலும் தற்போது உருவாகியுள்ள படம் கேங்கர்ஸ் (Gangers) . இந்த படத்தில் நடிகர் வடிவேலுவும் முன்னணி கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படமானது வரும் 2025, ஏப்ரல் 24ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. முற்றிலும் நகைச்சுவை கதைக்களத்துடன் இந்த படமானது உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகை நயன்தாராவை (Nayanthara) வைத்து மூக்குத்தி அம்மன் 2 (Mookuthi Amman 2)  திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் பூஜைகளுடன் சிறப்பாகத் தொடங்கியுள்ளது.

இந்த படத்தில் இவருடன் மீனா, அபிநயா, ரெஜினா என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடிக்கின்றனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராகவும், நடிகராகவும் இருந்து வரும் சுந்தர் சி முன்னதாக பேசிய வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் அரண்மனை 2 படத்தின் ரிலீஸின் போது மிகவும் பயந்ததாகவும் கூறியுள்ளார். அவர் எதற்காக அப்படிக் கூறினார் என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.

இயக்குநர் சுந்தர் சி சொன்ன விஷயம் :

முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் இயக்குநர் சுந்தர் சி “எனது சினிமா வாழ்க்கையிலே நான் அதிகம் பயந்த திரைப்படம் என்னவென்றால் அரண்மனை 2 படம்தான். எதற்கு என்றால் அந்த படமானது நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன் தினம் இரவில்தான் அரண்மனை4 படத்தை முழுமையாகப் பார்த்தேன். அதைப் பார்த்தபோது, எனது வாழ்க்கையே முழுமையாக முடிந்தது என்றுதான் நினைத்தேன்.

அப்படி என்ன நடந்தது என்றால், அரண்மனை 2 படத்தின் இறுதி காட்சிகளில் எடிட்டிங் கோளாறால் ஸ்கீரின் முழுவதும் பச்சை நிறமாகத் தெரிந்தது. அந்த இறுதி பாடலின் காட்சிகள் பச்சை மாறும் சிகப்பு நிறமாகத்தான் தெரிந்தது. இதைப் பார்த்ததும் எனக்குப் பயங்கர ஷாக் ஆகியது.

படம் அவ்வளவுதான் முடிந்தது என்று நினைத்தேன், ஏனென்றால் நான் இயக்கும் ஒரு ஒரு படத்தையும் எனது லைஃபாகதான் பார்ப்பேன். அந்த படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகளைப் பார்க்கும்போது எனது வாழ்க்கையே முடிந்தது என்றே நினைத்தேன். அந்த படம்தான் எனது வாழ்க்கையில் என்னை அதிக பயத்தை ஏற்படுத்திய திரைப்படம் என இயக்குநர் சுந்தர் சி தெரிவித்திருந்தார். தற்போது இயக்குநர் சுந்தர் சி பேசிய வீடியோ இணையத்தளங்ககளில் வைரலாகி வருகிறது.