மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய க்ரைம் த்ரில்லர் படங்களின் லிஸ்ட் இதோ

What To Watch: ஓடிடியில் வருகைக்கு பிறகு எந்த மொழி படங்களையும் எந்த ஊரில் உள்ள மக்களும் பார்க்கலாம் என்ற வசதி வந்துவிட்டது. இதன் காரணமாக மற்ற மொழிகளில் வெளியாகும் நல்லப் படங்களைப் பார்த்து ரசிகர்கள் தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தென்னிந்திய மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த க்ரைம் த்ரில்லர் படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

மிஸ் பன்னாமல் பார்க்க வேண்டிய க்ரைம் த்ரில்லர் படங்களின் லிஸ்ட் இதோ

படங்கள்

Updated On: 

25 May 2025 19:34 PM

ராட்சசன்: இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் கடந்த 2018-ம் ஆண்டு க்ரைம் த்ரில்லர் பாணியில் தமிழில் திரையரங்குகளில் வெளியான படம் ராட்சசன். இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்திருந்தார். நடிகை அமலா பால் நாயகனாக நடித்து இருந்தார். இவர்களுடன் இணைந்து இந்தப் படத்தில் நடிகர்கள், சரவணன், அம்மு அபிராமி, காளி வெங்கட், வினோதினி வைத்தியநாதன் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர். பள்ளி மாணவிகள் தொடர்ந்து கொலை செய்து வரும் ஒரு சைக்கோ கில்லரை காவல் துறை அதிகாரியான நடிகர் விஷ்ணு விஷால் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் கதை. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது சிறந்த க்ரைம் த்ரில்லர் படம் என்று பார்வையாளர்கள் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

த்ரிஷ்யம்: நடிகர் மோகன்லால் நடிப்பில் கடந்த 2013-ம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான க்ரைம் த்ரில்லர் படம் தான் த்ரிஷ்யம். இந்தப் படத்தை இயக்குநர் ஜீத்து ஜோசஃப் இயக்கி இருந்தார். இதில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக், கலாபவன் ஷாஜோன், ரோஷன் பஷீர் மற்றும் நீரஜ் மாதவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

தனது மகனை காணவில்லை என்று காவல் துறை உயர் அதிகாரியாக இருக்கும் ஆஷா சரத் தேடுகிறார். பின்பு அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற எண்ணத்தில் விசாரணை நடத்தும் போது அதில் மோகன்லால் குடும்பத்தினர் சந்தேக வலையில் சிக்குகிறார்கள். அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பது படத்தின் கதை. இந்தப் படம் தற்போது ஹார்ஸ்டார் மற்றும் அமேசார் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

போர் தொழில்: இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் போர் தொழில். க்ரைம் த்ரில்லர் பாணியில் தமிழில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரு ஊரில் சைக்கோ கொலைகாரனால் இளம் பெண்கள் தொடர்ந்து ஒரே மாதிரியான முறையில் கொல்லப்படுகிறார்கள். அவர்களை யார் கொலை செய்கிறார் என்பதை கண்டுபிடிப்பதற்காக காவல் துறை அதிகாரிகளாக இருக்கும் சரத் குமார் மற்றும் அசோக் செல்வன் அந்த ஊருக்கு செல்கிறார்கள். அப்போது பல திருப்பங்கள் ஏற்படுகின்றது. அதனை தொடர்ந்து என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படம் தற்போது சோனி லிவ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஃபாரன்சிக்: நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் ஃபாரன்சிக். சைக்கலாஜிகள் த்ரில்லர் பாணியில் உருவான் இந்தப் படத்தை இயக்குநர்கள் அகில் பால் மற்றும் அனஸ் கான் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாமஸ் உடன் இணைந்து நடிகர்கள் மம்தா மோகன்தாஸ், சைஜு குருப், ரெஞ்சி பணிக்கர் மற்றும் ரெபா மோனிகா ஜான்.

இந்தப் படம் திரையரங்குகளில் வெளியான போது நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைப் போல படம் ஓடிடியிலும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் தற்போது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.