மம்முட்டியா இல்ல மோகன்லாலா… மாளவிகா மோகனனின் சூப்பர் பதில்

Actress Malavika Mohanan: தமிழ் சினிமா மட்டும் இன்றி மலையாளம் மற்றும் தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் உரையாடலில் ஈடுபட்ட போது ரசிகர் கேட்ட கேளிக்கு மிகவும் சாமர்த்தியமாக பதிலளித்துள்ளார்.

மம்முட்டியா இல்ல மோகன்லாலா... மாளவிகா மோகனனின் சூப்பர் பதில்

மாளவிகா மோகனன்

Published: 

25 May 2025 14:10 PM

மலையாள சினிமாவில் கடந்த 2013-ம் ஆண்டு இயக்குநர் அழகப்பன் இயக்கத்தில் வெளியான பட்டம் போலே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகம் ஆனார் நடிகை மாளவிகா மோகனன் (Actress Malavika Mohanan). இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் நடிகை மாளவிகா மோகனன். 2013-ம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகம் ஆன நடிகை மாளவிகா மோகனன் 2019-ம் ஆண்டு வரை மற்றும் மொழிப் படங்களிலேயே தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் இயக்குநர் கார்திக் சுப்பராஜ் தான் தமிழ் சினிமாவில் இவரை நடிகையாக அறிமுகப்படுத்தினார்.

சூப்பர் ஸ்டார் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆன மாளவிகா மோகனன்:

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பேட்ட. இந்தப் படத்தில் நடிகர்கள் சசிகுமார், சிம்ரன், த்ரிஷா கிருஷ்ணன், மாளவிகா மோகனன், நாவசுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மகேந்திரன், குரு சோமசுந்தரம், முனிஷ்காந்த், விவேக் பிரசன்னா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் நண்பராக வரும் நடிகர் சசிகுமாரின் காதல் மனைவியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருந்தார். இது இவர் தமிழில் அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். தமிழில் அறிமுகம் ஆகும் முதல் படத்திலேயே காலேஜ் படிக்கும் பையனுக்கு அம்மாவாக நடிப்பதில் எந்த தயக்கமும் காட்டவில்லை நடிகை மாளவிகா மோகனன்.

மாஸ்டரில் விஜயுடன் ஜோடிபோட்ட நடிகை மாளவிகா மோகனன்:

பேட்ட படத்தின் வெற்றியை தொடந்து தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே தளபதி விஜய்க்கு நாயகியாக நடித்தார் நடிகை மாளவிகா மோகனன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் நாயகனாகவும் நடிகை மாளவிகா மோகனன் நாயகியாகவும் நடித்திருந்தனர்.

தமிழில் நடிக்கத் தொடங்கி இரண்டாவது படத்திலேயே நடிகர் விஜய் உடன் ஜோடிபோட்டு நடித்ததால் நடிகை மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியளில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி என பலருடன் பணியாற்றி வருகிறார்.

மம்முட்டி அல்லது மோகன்லால்?

பான் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பார். இவர் சமீபத்தில் ரசிகர்களுடன் நடத்திய உரையாடலின் போது ரசிகர் ஒருவர் மம்முட்டியா அல்லது மோகன்லாலா என்று கேள்வி எழுப்பினார்.

நடிகை மாளவிகா மோகனனின் எக்ஸ் தள பதிவு:

அதற்கு நடிகை மாளவிகா மோகனன் மிகவும் சாமர்த்தியமாக பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, அவர்களில் ஒருவர் என்னை அழகான இந்த சினிமா உலகிற்குள் அறிமுகப்படுத்தினார், மற்றொருவருடன் நான் தற்போது ஒரு அழகான படத்தில் நடித்துள்ளேன்.
அதனால் இது கொஞ்சம் நியாயமற்ற கேள்வி, இல்லையா என்று பதிலளித்துள்ளார்.