Trisha Krishnan: துரோகி என சொன்ன நெட்டிசன்கள்.. நடிகை த்ரிஷா கொடுத்த பதில்!

Trisha Has Commented On The Thug Life Trailer Controversy : தமிழ் சினிமாவில் பிரபல கதாநாயகிகளில் ஒருவர்தான் திரிஷா கிருஷ்ணன் . இவரின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம் தக் லைஃப். சமீபத்தில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி விமர்சனங்களைப் பெற்றுவரும் நிலையில், அதற்கு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

Trisha Krishnan: துரோகி என சொன்ன நெட்டிசன்கள்.. நடிகை த்ரிஷா கொடுத்த பதில்!

த்ரிஷா கிருஷ்ணன்

Published: 

23 May 2025 15:13 PM

கோலிவுட் சினிமாவில் இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் தக் லைஃப் (Thug Life). இந்த படத்தில் லீட் நடிகர்களாக நடிகர் சிலம்பரசன் (Silambarasan) மற்றும் கமல்ஹாசன் (Kamal Haasan) இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் கதையை மணிரத்னத்துடன் நடிகர் கமல்ஹாசனும் இணைந்து எழுதியுள்ளார். இந்த படத்தில் இரு பெரும் தூண்களாக நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் நடித்துள்ளார்கள். இந்த படமானது முற்றிலும் ஆக்ஷ்ன், க்ரைம் திரில்லர் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகைகள் த்ரிஷா கிருஷ்ணன் (Trisha Krishnan) மற்றும் அபிராமி இணைந்து நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட திரைப்படமான தக் லைஃப் வரும் 2025ம் ஆண்டு ஜூன் 5ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸை தொடர்ந்து, படம் தொடர்பான ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள், தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் கேரளா என பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை த்ரிஷா சிலம்பரசனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், கமல்ஹாசனுடன் நெருக்கமான காட்சியில் இருப்பது போல ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் இது குறித்து நடிகை த்ரிஷா கிருஷ்ணன் பேசியுள்ளார். அவர் பேசியது குறித்து விளக்கமாகப் பார்க்கலாம்.

ட்ரெய்லர் விமர்சனங்கள் குறித்து நடிகை த்ரிஷா விளக்கம் ;

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட நடிகை த்ரிஷா கிருஷ்ணனிடம், ட்ரெய்லர் தொடர்பாக கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு நடிகை த்ரிஷா கிருஷ்ணன் ,” நானும் சில நேர்காணலில் கூறியிருக்கிறேன், எனக்கும் ட்ரெய்லர் ரிலீசிற்கு பிறகு, துரோகி என கருத்துக்கள் சமூக ஊடகங்களில் எல்லாம் வந்தது. எல்லாரும் ட்ரெய்லர் பார்த்துவிட்டு அதிர்ச்சியானதாக கூறுகிறார்கள். ஆனால் படத்தில் இன்னும் நிறைய ஷாக் விஷயங்கள் இருக்கிறது. அதனால் படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். 2 மணிநேரம் படத்தில் இருந்து ஒரு 2 நிமிட ட்ரெய்லர்தான் பார்த்திருக்கிறீர்கள், படத்தை முழுவதுமாக பாருங்கள்.

இந்த படத்தில் சிலம்பரசனுக்கு ஜோடி இருக்கிறதா என்று எல்லாம் எனக்குத் தெரியாது படத்தில் பார்த்துக்கொள்ளுங்கள். இந்த தக் லைஃப் பட ட்ரெய்லர் ரிலீசானதற்கு பின் கமல் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பார்த்தாரா என்று தெரியவில்லை, அனைவரும் என்னிடம் நீங்கள் கமல்ஹாசனுக்கு ஜோடியா என்றுதான் கேட்டிருந்தார்கள். நிச்சயம் இதற்காகப் பதில் வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் அனைவருக்கும் உண்டு என நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கூறியுள்ளார். தற்போது இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தக் லைஃப் படக்குழு வெளியிட்ட பதிவு :

கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் வரும் 2025ம் ஆண்டு ஜூன் 5ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் , ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.