டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி விழாவில் கண்கலங்கி எமோஷ்னலான சிம்ரன்
Actress Simran: நடிகை சிம்ரன் டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றி விழாவில் கலந்துகொண்ட போது மிகவும் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். மேலும் படம் குறித்தும் படக்குழுவினர் குறித்தும் அவர் பேசும் போது மிகவும் கண்கலங்கி எமோஷ்னலானது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

சிம்ரன்
நடிகை சிம்ரன் (Actress Simran) 1995-ம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடித்து வருகிறார். முதலில் இந்தி சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆன இவர் அதனைத் தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சுமார் 30 வருடங்களாக சினிமாவில் இருக்கும் நடிகை சிம்ரனுக்கு எல்லா வயதினரும் ரசிகர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நடித்தால் நாயகியாக மட்டுமே நடிப்பேன் இல்லை என்றால் சினிமாவை விட்டு விலகிவிடுகிறேன் என்று சிம்ரன் வயது உள்ள நடிகைகள் பலர் முடிவெடுத்த நிலையில் நல்ல கதாப்பாத்திரமாக இருந்தால் எந்தப் படத்தில் வேண்டுமானாலும் நடிப்பேன் என்று நடிகை சிம்ரன் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான் டூரிஸ்ட் ஃபேமிலி படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தைப் பெற்று வருகின்றது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான டூரிஸ்ட் ஃபேமிலி படம் மே மாதம் 1-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இதில் நாயகனாக நடிகர் சசிக்குமார் நடித்திருந்தார். நடிகை சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார். இலங்கையை விட்டு பிழைப்பிற்காக தமிழகத்திற்கு வரும் ஈழ தமிழ் குடும்பத்தைப் பற்றிய கதை தான் டூரிஸ்ட் ஃபேமிலி.
இந்தப் படம் திரையாங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பிரலங்கள் என பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நடிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் சிவகார்த்திகேயன், நடன இயக்குநர் பிரபுதேவா என பலரும் தங்களது வாழ்த்துகளை படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு தெரிவித்தனர்.
நடிகை சிம்ரனின் இன்ஸ்டா பதிவு:
இந்த நிலையில் இன்று டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் வெற்றி விழா நடைப்பெற்றது. இதில் கலந்துகொண்ட நடிகை சிம்ரன் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி பேசினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் அவர் பேசியதாவது, இந்தப் படத்தின் கதையை நான் ஜூம்காலில் தான் கேட்டேன் அப்போவே தெரியும் இந்தப் படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்று.
மேலும் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தின் அறிமுக படத்தில் நான் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு. அவர் நல்லா இருக்கனும் என்று இயக்குநருக்கு வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து தன்னுடன் நடித்த நடிகர் சசிகுமார் சிறந்த நடிகர் என்றும் அவரிடம் கற்றுக்கொள்ள நிறைய விசயங்கள் இருக்கு என்றும் சிம்ரன் புகழ்ந்து பேசினார்.