Ritika Singh : ஹெவி ஒர்கவுட்… உடல் எடையைக் குறைத்த இறுதிச்சுற்று ரித்திகா சிங்!

Ritika Singh workout : சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ரித்திகா சிங். இவர் இயக்குநர் சுதா கொங்கராவின் இறுதிச்சுற்று என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு முன் இவர் பிரபல விளையாட்டு வீராங்கனையாக இருந்து வருகிறார். இந்நிலையில் இவர் உடல் எடையை வெறித்தனமாக ஒர்கவுட் செய்து குறித்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Ritika Singh : ஹெவி ஒர்கவுட்... உடல் எடையைக் குறைத்த இறுதிச்சுற்று ரித்திகா சிங்!

நடிகை ரித்திகா சிங்

Updated On: 

05 May 2025 17:31 PM

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ரித்திகா சிங் (Ritika Singh). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் வேட்டையன் (Vettaiyan). நடிகர் ரஜினிகாந்த்தின் (Rajinikanth) முன்னணி நடிப்பில் வெளியான இந்த படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்கியிருந்தார். கடந்த 2024ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகை ரித்திகா சிங் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து வேறு படங்களிலும் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. நடிகை ரித்திகா சிங் சினிமாவில் நுழைவதற்கு முன் பிரபல பாக்சிங் வீராங்கனையாக (Boxing champion)  இருந்துள்ளார். இவர் கடந்த 2016ம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று (Irudhi Suttru) என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார். இந்த படத்திலும் அவர் பாக்சிங் வீராங்கனையாக நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி இவருக்கு பெரும் வரவேற்பைக் கொடுத்தது, அதை தொடர்ந்து சினிமாவின் பக்கம் திரும்பினார்.

இந்நிலையில் நடிகை ரித்திகா சிங் கடின உடற்பயிற்சி மூலமாக எடையைக் குறைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ரித்திகா சிங் . ஜிம் மட்டுமல்லாமல் நடனத்தின் மூலமாகவும் எடையைக் குறித்துள்ளதாக அவர் கூறியிருக்கிறார். அதிக உடல் எடையுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு, அதில்  எவ்வாறு உடல் எடையைக் குறித்தார் என்பது குறித்து தெளிவாக பேசியிருக்கிறார். ஹெவி ஒர்கவுட் செய்யும் அவரின் வீடியோ, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை ரித்திகா சிங் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ :

இவர் இந்த வீடியோவில் கடினமாக ஒர்கவுட் செய்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மோட்டிவேஷனாக இருப்பதாகவும், ஒர்கவுட் செய்ய தூண்டுவதாகவும் பலரும் கூறி வருகின்றனர். நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த படமானது இவருக்கு நல்ல பிரபலத்தை கொடுத்தாலும், இவரின் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த 2020ம் ஆண்டு வெளியான இந்த படைத்ததை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். இவர்தான் பிரதீப் ரங்கநாதனின் டிராகன் படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகை ரித்திகா சிங் அணு என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.

இந்த படத்தைத் தொடர்ந்து இந்தி படத்திலும் முக்கிய ரோலில் நடித்திருந்தார். மேலும் நடிகை ரித்திகா சிங் இறுதியாக ரஜினியின் வேட்டையன் படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படத்தைதொடர்ந்து நடிகை ரித்திகா சிங் புதிய படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.