தி கேர்ள் ஃப்ரண்ட் படம் தாமதமாக என்ன காரணம்? நடிகை ராஷ்மிகா மந்தனா விளக்கம்
Actress Rashmika Mandanna: இயக்குநர் ராகுல் ரவீந்திரன் இயக்கத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவான தி கேர்ள் ஃபிரண்ட் படத்தின் கடந்த டிசம்பர் மாதம் 9-ம் தேதி 2024-ம் ஆண்டு அன்று டீசர் வெளியானது. இந்த நிலையில் படம் குறித்த முக்கிய அப்டேட்டை நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா (Actress Rashmika Mandanna) நடிப்பில் முன்னதாக வெளியான தி கேர்ள் ஃப்ரண்ட் படத்தின் டீசர் வெளியாகி கவனத்தைப் பெற்ற நிலையில் அந்தப் படம் குறித்த வேறு எந்த அப்டேட்களும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில் அதுகுறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட அப்டேட் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றது. அதில் அவர் கூறியுள்ளதாவது, வணக்கம் என் அன்பர்களே, நாங்கள் உங்களை காத்திருக்க வைத்துள்ளோம் என்பது எனக்குத் தெரியும், ஆனால் என்னை நம்புங்கள். உங்களுக்கு சிறந்த படத்தை கொடுக்க உண்மையிலேயே நாங்கள் உழைத்து வருகிறோம். இந்தப் படம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். மேலும் இந்தப் படத்தில் நாம் பொதுவாக அதிகம் பேசாத விஷயங்களைப் பற்றி பேசும் என்றும் நடிகை ராஷ்மிகா அந்தப் பதிவில் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே படம் தாமதம் ஆகியுள்ளது என்றும் விரைவில் ரசிகர்களாகிய உங்களுக்கு ஒரு சிறந்த படத்தை வழங்குவோம் என்றும் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Hi my lovelies❤️
I know we’ve been making you wait and your trend really is something else.. 😄but trust me @23_rahulr is really working on it to give you the best output and it’s one of the most special kind of films.. its a film where we speak about things we generally don’t… https://t.co/j94GyW7mF0— Rashmika Mandanna (@iamRashmika) May 17, 2025
நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக காத்திருக்கின்றது. அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் இறுதியாக தெலுங்கு சினிமாவில் புஷ்பா 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்தார். படத்தை இயக்குநர் சுகுமாரன் இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து இந்தியில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் வெளியானது. நடிகர் விக்கி கௌஷல் உடன் இணைந்து நடிகை ராஷ்மிகா நடித்த சாவா படம் மற்றும் நடிகர் சல்மான் கான் உடன் இணைந்து சிக்கந்தர் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
இந்தப் இரண்டு படங்களும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து 3 படங்களும் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு சூப்பர் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து ஹார்ட்ரிக் நாயகி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். மேலும் பான் இந்திய ரசிகர்களின் மனதிலும் நீங்காத இடம் பிடித்தார்.
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் தற்போது இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து குபேரா படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ஜூன் மாதம் 20-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மேலும் இந்தியில் உருவாகும் தமா படத்திலும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இந்தப் படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.