Dude: அதிரடி ஹீரோவாக பிரதீப் ரங்கநாதன்.. மமிதா பைஜூவுடன் ஜோடி.. ‘டியூட்’ படத்தின் செகண்ட் லுக்!
Dude Movie 2nd Look : தமிழ் சினிமாவில் லவ் டுடே என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இயக்குநராக சினிமாவில் நுழைந்த இவர் தற்போது முன்னணி நாயகனாகப் படங்களில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இவரின் நடித்துவரும் டியூட் படத்தின் 2வது பார்வையைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜூ
நடிகர் ரவி மோகனின் (Ravi Mohan) கோமாளி (Comali) என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக சினிமாவில் நுழைந்தவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவர் படங்களை இயக்குவதோடு, படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். இவரின் இயக்கத்தில் வெளியான லவ் டுடே (Love Today) என்ற படத்தில் ரசிக்கும் நாயகனாக நடித்து ஹீரோவாக அறிமுகமாகினார். இந்த படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் டிராகன் (Dragon) படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் இளம் நடிகைகளான அனுபமா பரமேஸ்வரன் மற்றும் கயாடு லோஹருடனும் இணைந்து நடித்திருந்தார். இந்த படமும் எதிர்பார்த்ததைவிட அதிகம் வசூல் செய்து பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி (Love Insurance Kompany) படத்தில் நடித்து வந்தார். இதை தொடர்ந்து, பிரதீப் நடித்து வரும் 4வது திரைப்படம்தான் டியூட் (DUDE).
இந்த படத்தை ஆரம்பத்தில் பிஆர்04 என்றுதான் அழைக்கப்பட்டு வந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 2025, மே 10ம் தேதியில் படக்குழு டைட்டிலுடன் முதல் பார்வையை வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இந்த படக்குழு படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் பிரதீப் ரங்கநாதனுடன், நடிகை மமிதா பைஜூவும் இடம் பெற்றுள்ளார். தற்போது இந்த போஸ்டரானது வெளியாகி இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது.
டியூட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு ;
The #DUDE is coming with his LOVE for a Blasting & Entertaining Diwali in theatres ❤🔥🥁
All set for a MASSIVE DIWALI 2025 RELEASE 💥💥
In Tamil, Telugu, Kannada, Malayalam & Hindi.⭐ing ‘The Sensational’ @pradeeponelife
🎬 Written and directed by @Keerthiswaran_
A… pic.twitter.com/cv9ZM5GR9G— Mythri Movie Makers (@MythriOfficial) May 11, 2025
நடிகர் பிரதீப் ரங்கநாதனின் 4வது திரைப்படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கி வருகிறார். இவர் இயக்குநர் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் ஆவார். அவருடன் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
பிரதீப் ரங்கநாதனின் இந்த படத்தை அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரித்திருந்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைத்து வருகிறார். இந்த இசையமைப்பாளர் சூர்யா 45, பென்ஸ் மற்றும் STR 49 படத்திலும் இசையமைத்து வருகிறார்.
இந்த திரைப்படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, ஹிருத்து ஹூரன், சரத்குமார் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2025, ஏப்ரல் தொடக்கத்தில் ஆரம்பமான நிலையில், விறுவிறுப்பாகி நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தப் படமானது வரும் 2025, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் இந்தப் படமானது உருவாகி வருகிறது. டிராகன் படத்தை போல இந்த படமும் பிரதீப் ரங்கநாதனுக்கு நிச்சயம் வெற்றியைத் தரும் என்று கூறப்படுகிறது.