மோகன்லால் – மாளவிகா மோகனின் ஹிருதயப்பூர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

Actors Mohanlal: நடிகர் மோகன்லால் இன்று மே மாதம் 21-ம் தேதி 2025-ம் ஆண்டு தனது 65-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஹிருதயப்பூர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

மோகன்லால் - மாளவிகா மோகனின் ஹிருதயப்பூர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ

மோகன்லால், மாளவிகா மோகனன், சங்கீத் பிரதாப்

Published: 

21 May 2025 18:22 PM

மோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் (Actor Mohanlal) நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஹிருதயப்பூர்வம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சத்யன் அந்திகாடு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் மாளவிகா மோகனன் மற்றும் சங்கீத் பிரதாப் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் ஃபேமிலி செண்டிமெண்டை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தை ஆசீர்வாத் சினிமாஸ் பேனரின் கீழ் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். நடிகர் மோகன்லால் இயக்குனர் சத்யன் அந்திக்காட் உடன் இணைந்து பணியாற்றும் 18வது படமாக ஹிருதயபூர்வம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் மோகன்லாலின் எக்ஸ் தள பதிவு:

மோகன்லாலுக்கு வெற்றிமுககாக இருக்கும் 2025:

இந்த 2025-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே நடிகர் மோகன்லாலுக்கு வெற்றிமுகம் என்றே சொல்லலாம். அதன்படி நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியானது L2: எம்புரான் படம். இந்தப் படம் 2019-ம் ஆண்டு வெளியான லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர், சுராஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், கிஷோர் மற்றும் பிரனவ் மோகன்லால் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தீபக் தேவ் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் 27-ம் தேதி மார்ச் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக மலையாள சினிமாவில் வசூலில் புதிய பெஞ்ச் மார்க்கை செட் செய்தது குறிப்பிடத்தக்கது.

மலையாளத்தில் ஹிட் அடித்த துடரும் படம்:

நடிகர் மோகன்லால் நடிப்பில் இறுதியாக வெளியான படம் துடரும். இந்தப் படத்தில் நடிகை சோபனா நாயகியாக நடித்துள்ளார். சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு இந்த ஜோடி இணைந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். மோகன்லாலின் இந்த துடரும் படத்தை இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கி இருந்தார்.

ஏப்ரல் மாதம் 25-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சரன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தினை தொடரும் என்ற பெயரில் தமிழில் டப் செய்து படக்குழு வெளியிட்டது. தமிழில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.