பணத்திற்காக பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கிறேனா? நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

Actor Vijay Sethupathi: தமிழ் சினிமாவில் நாயகன், வில்லன் என்று மாறி மாறி மாஸ் காட்டி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்து மாஸ் காட்டியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

பணத்திற்காக பெரிய பட்ஜெட் படங்களில் நடிக்கிறேனா? நடிகர் விஜய் சேதுபதி விளக்கம்

நடிகர் விஜய் சேதுபதி

Published: 

21 May 2025 15:43 PM

நடிகர் விஜய் சேதுபதி (Actor Vijay Sethupathi) பெரிய பட்ஜெட் படங்களில் நடிப்பது பணத்திற்காக இல்லை என்று வெளிப்படையாக பேசியுள்ளார். சமீபத்தில் கலாட்டா யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி எந்தப் படத்தையும் பணத்திற்காக நடிக்க ஒப்புக்கொள்வதில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். தற்போது நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கும் படம் ஏஸ். இந்தப் படத்தை இயக்குநர் ஆறுமுகக் குமார் எழுதி இயக்கியுள்ளார். மேலும் இந்தப் படத்தை 7Cs எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆறுகக் குமாரே தயாரித்தும் உள்ளார். இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி உடன் இணைந்து நடிகர்கள் ருக்மணி வசந்த், யோகி பாபு, பப்லூ பிருத்விராஜ், திவ்யா பிள்ளை, பி.எஸ். அவினாஷ், ராஜ் குமார், முத்துக்குமார், ஆல்வின் மார்ட்டின், கார்த்திக் ஜே, டெனெஸ் குமார்,  பிரிசில்லா நாயர், ஜாஸ்பர் சுப்பையா, ஜஹ்ரினாரிஸ், நகுலன் என பலர் நடித்துள்ளனர்.  சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

கடின உழைப்பால் கதாநாயகனான விஜய் சேதுபதி:

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களிலும் பெயரிடப்படாத வேடங்களிலும் நடித்து வந்தவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. 1996-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இவர் 2010-ம் ஆண்டு இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார்.

நடிகர் விஜய் சேதுபதியின் எக்ஸ் தள பதிவு:

விஜய் சேதுபதியின் நடிப்பில் ஹிட் அடித்தப் படங்கள்:

தென்மேற்கு பருவக்காற்று படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா, நடுவுள கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், நானும் ரௌடிதான், சேதுபதி, காதலும் கடந்துபோகும், இறைவி, தர்மதுறை, இறைவி, கவான், விக்ரம் வேதா, 96 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

கதாநாயகன் டூ வில்லன்:

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு இயக்குநர் கார்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் வில்லனாக நடித்தார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜயின் மாஸ்டர் படத்தில் வில்லனாகவும், விக்ரம் படத்தில் கமல் ஹாசனுக்கு வில்லனாகவும் நடித்து கலக்கியிருப்பார்.