நடிகர் ரவி மோகனிடம் மாதம் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி ரவி மனு!

Actor Ravi Mohan: நடிகர் ரவி மோகன் கடந்த ஆண்டு தனது மனைவியிடம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாணை தொடர்ந்து நடைப்பெற்று வரும் நிலையில் தற்போது ஆர்த்தி ரவி மாதம் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று மனு அளித்துள்ளார்.

நடிகர் ரவி மோகனிடம் மாதம் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி ரவி மனு!

ரவி மோகன், ஆர்த்தி ரவி

Updated On: 

21 May 2025 14:21 PM

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரவி மோகன் (Actor Ravi Mohan). இவர் தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக மாறினார் ரவி மோகன். இந்த நிலையில் கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர் பிரபல தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆவார். இந்த நிலையில் 15 வருட திருமண வாழ்க்கையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஆர்த்தி ரவி இதுகுறித்து தன்னிடம் எந்த ஆலோசனையும் பன்னாமல் அவரே அறிவித்துவிட்டார் என்று தெரிவித்தது மேலும் சர்ச்சையை கிளப்பியது.

பாடகி கெனிஷா உடன் ரவிமோகன் காதல் என கிசுகிசு:

கடந்த ஆண்டு விவாகரத்து கோரி நடிகர் ரவி மோகன் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கு விசாரணை தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றது. இதற்கு இடையில் நடிகர் ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா இடையே காதல் மலர்ந்ததால் தான் ரவி மோகன் அவர் மனைவியை பிரிகிறார் என்ற கிசுகிசுக்கள் வெளியானது.

அதனைத் தொடர்ந்து ரவி மோகன் அப்படி எதுவும் இல்லை என்றும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஜோடியாக வந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. இதனைத் தொடர்ந்து ஆர்த்தி ரவி, ரவி மோகன் மற்றும் ஆர்த்தியின் அம்மா சுஜாதா என மாறிமாறி அறிக்கை வெளியிட்டு வந்தனர்.

நடிகர் ரவி மோகனின் எக்ஸ் தள பதிவு:

மாதம் ரூபாய் 40 லட்சம் ஜீவனாம்சம் கேட்டு ஆர்த்தி ரவி மனு:

நடிகர் ரவி மோகன் விவாகரத்து கோரிய வழக்கு இன்று 21-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு மீண்டும் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதி தேன்மொழி விசாரித்தார். இன்று வழக்கு விசாரணைக்கு நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர்.

அப்போது ஆர்த்தி உடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்றும் அவரிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஆர்த்தி அளித்த மனுவை ரத்து செய்ய வேண்டும் என்றும் நடிகர் ரவி மோகன் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ரவி மோகன் மாதம் ரூபாய் 40 லட்சம் ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்று ஆர்த்தி தரப்பில் நீதிமன்றதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி தேன்மொழி வழக்கு விசாரனையை வருகின்ற ஜூன் மாதம் 12-ம் தேதி 2025-ம் ஆண்டுக்கு ஒத்திவைத்தார்.