மீண்டும் இணையும் ஹிட் கூட்டணி… விஷாலின் அடுத்தப் பட அப்டேட் இதோ
Actor Vishal: நடிகர் விஷால் சமீப காலமாக படம் தொடர்பான செய்திகளில் இடம் பெறுவதை விட சொந்த விசயம் காரணமாகவே தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். அதன்படி சமீபத்தில் இவரது திருமண செய்திதான் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. அதன்படி இவர் நடிகை சாய் தன்சிகாவை திருமணம் செய்ய உள்ளார்.

விஷால்
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஷால். கடந்த 2004-ம் ஆண்டு இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆனார் நடிகர் விஷால். வருமான வரித்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் அசத்தியிருப்பார் நடிகர் விஷால். இந்தப் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை ரீமா சென் நடித்திருந்திருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பரத், விவேக், கிரிஷ் கர்னாட், ஸ்ரீரஞ்சனி என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து 2005-ம் ஆண்டு நடிகர் விஷால் நடிப்பில் வெளியான படம் சண்டக்கோழி. இயக்குநர் லிங்குசாமி இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.
இந்தப் படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். இவருகளுடன் இணைந்து நடிகர்கள் ராஜ்கிரண், லால், சுமன் ஷெட்டி, கஞ்சா கருப்பு, தலைவாசல் விஜய், ஷண்முக ராஜன், மோனிகா, விதார்த், இளங்கோ குமரவேல் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். படத்தில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்.
விஷால் நடிப்பில் வெளியான ஹிட் படங்கள்:
அதனைத் தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன், பட்டத்து யானை, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், பூஜை, ஆம்பளை, பாயும் புலி, மருது, துப்பறிவாளன், இரும்புத் திரை, எனிமி, லத்தி, மார்க் ஆண்டனி, ரத்னம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
விஷாலின் மத கஜ ராஜா படத்தின் வெற்றி:
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஷால் நாயகனாக நடித்தப் படம் மத கஜ ராஜா. இந்தப் படம் உருவான போது வெளியீட்டில் சில சிக்கல்கள் ஏற்பட்டதால் படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தை தூசி தட்டி கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிட்டது படக்குழு.
நடிகர் விஷாலின் இன்ஸ்டா பதிவு:
12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரான படம் என்றாலும் ரசிகரக்ளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது இந்தப் படம். இதில் நடிகர் விஷால் உடன் இணைந்து நடிகர்கள் சந்தானம், வரலக்ஷ்மி, அஞ்சலி என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். படம் சமீபத்தில் தயாரான படங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரும்புத் திரை இயக்குநர் உடன் மீண்டும் கூட்டணி வைக்கும் விஷால்:
இந்த நிலையில் நடிகர் விஷாலின் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி விஷால் நடிப்பில் முன்னதாக வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த இரும்புத் திரை படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.மித்ரன் மீண்டும் விஷாலின் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த கூட்டணி மீண்டும் இணைந்தால் படம் சூப்பர் ஹிட் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.